அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அரசியல் மயமாக்கப்பட்டு வருகின்றன

அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அரசியல் மயமாக்கப்பட்டு வருகின்றன தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயாவை, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிட்டார். கடந்த ஞாயிறன்று பிகார்மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பை அடுத்து பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் பாராளுமன்ற மேல்சபை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லியுடன் அக்கோயிலை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் ஐ.மு.,கூட்டணி அரசு கடும்தோல்வியை சந்தித்து வருகிறது. இந்தியாவின் மீது தொடுக்கப்படும் பொருளாதா ரீதியான தாக்குதல், சைபர்தாக்குதல், தீவிரவாத தாக்குதல் எல்லா சவால்களையும் முறியடிக்க புதிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

ஆன்மிக தலமான மகா போதி ஆலயத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் கண்டனத்து குரியது. எந்த தீவிரவாத தாக்குதலையும் அரசியலாக்க பாஜக. முயன்றதுகிடையாது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் அனைத்து பின்னணிகளும் முறையாக விசாரிக்கப்படவேண்டும்.

இந்த பழம் பெருமை வாய்ந்த ஆலயத்துக்கு தேவையான அதிகபட்சபாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தவேண்டும். தற்போதைய நிலையில் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அரசியல்மயமாக்கப்பட்டு வருகின்றன.

புலனாய்வு அமைப்புகள் மேலும் அதிகதன்னாட்சி உரிமையுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். மத்திய உளவுத் துறை, சிபிஐ. ஆகியவற்றை மத்திய அரசு ஒன்றுக்கு ஒன்று எதிர்த்துக்கொள்ளும் வகையில் கொம்பு சீவி விட்டுள்ளது. நாட்டில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.

மகாபோதி ஆலயத்தில் தாக்குதல்நடத்தப்பட உள்ளது தொடர்பான சில பிரத்யேக எச்சரிக்கைகள் புறக்கணிக்க பட்டுள்ளன. மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மேலும் அதிக ஒருங்கிணைப்பு ஏற்படவேண்டும்.

எந்தமாநிலமும் தீவிரவாதத்தை எதிர்த்து தனியாக போராடமுடியாது. அவற்றுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...