பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்

பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவுக்கு பெருமை என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உற்பத்தி மையம் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ராஜ்நாத் சிங் பேசியதாவது: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்த ஆலை திறப்பு விழாவிற்கு நேரில் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் காரணம் உங்களுக்குத் தெரியும், நான் டில்லியில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளை பார்க்கும் போது நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறை வேற்றுவது மிக முக்கியம். வாஜ்பாய் தலைமையில் விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி நமது வலிமையை உலகிற்கு காட்டினர்.

இந்தியாவை வளர்ப்பதில் நாம் மிகுந்த பலத்துடன் முன்னேற வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவுக்கு பெருமை.நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க இது ஒரு சந்தர்ப்பம். வெறும் 40 மாதங்களில், இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது. உத்தரபிரதேச முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடைக்கலம்
ராவல்பிண்டியில் உள்ள பாக் ராணுவ தலைமையகம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்த்தி உள்ளோம். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி உள்ளோம். பாகிஸ்தான் ராணுவம் தான் வழிபாட்டு தலங்கள், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நம்மிடம் 140 கோடி தீர்வுகள் உள்ளன

நம்மிடம் 140 கோடி தீர்வுகள் உள்ளன அரசுத் தலைமைப் பொறுப்பில் கால் நூற்றாண்டு: 2047-க்குள் வளர்ந்த ...

அரசனே காலத்தைத் தீர்மானிக்கிறà® ...

அரசனே காலத்தைத் தீர்மானிக்கிறான் "ஏறக்குறைய எல்லா மனிதர்களாலும் இடர்களைத் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் ...

மோடி பல போராட்டங்களால் புடம்போ ...

மோடி பல போராட்டங்களால்  புடம்போடப்பட்டவர் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் பிரதிநிதியாகத் தன் தொடர்ச்சியான ...

ஃபிளைதுபாய் கடத்தல் கவர் ஸ்டோரà ...

ஃபிளைதுபாய் கடத்தல் கவர் ஸ்டோரி ஃபிளைதுபாய் காக்பிட் தாக்குதலில் இஸ்ரேல்-அமெரிக்கா ஆக்ரோஷம்; வளைகுடா நாடுகள் ...

மக்கள் சேவையில் இருந்து ஒருபோதà ...

மக்கள் சேவையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி நாட்டு மக்களின் சேவையே பாரதிய ஜனதா கட்சியின் உயிர்நாடியாக ...

ஜெம் வீரமணி வழக்கில் பாரபட்சமறà ...

ஜெம் வீரமணி வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை தேவை: வானதி சீனிவாசன் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் வீரமணி தொடர்பான போக்சோவழக்கில் எந்தவித ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...