கொள்கை எதிரிகளை தீர்த்துக் கட்டுவது சமூக, அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும்

கொள்கை எதிரிகளை தீர்த்துக் கட்டுவது சமூக, அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும் சேலத்தில் தமிழக பாஜக. பொதுச்செயலர் ஆடிட்டர் வி.ரமேஷ், சமூகவிரோதிகளால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

பாஜக.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவுகொண்ட இந்து சமயக்கட்சியினர் சிலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியை சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதே போன்று கொடூரமாக கொல்லப் பட்டிருக்கிறார். மற்றொரு மாநிலநிர்வாகியான காந்தி என்பவர் நடைப யிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்தகொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார்.

தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலர் தமிழிசை செளந்தரராசன் கூறியுள்ளது போல், இது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகிறது. ஆனால், காவல் துறையினர் உரியநடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் இப்படிப்பட்ட படுகொலைகள் தடையின்றி தொடர்கிறது என்று கூறியுள்ளார். இந்த கொலைகள் செய்தவர்களைப்பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும், பணத்திற்கு கொலைசெய்யும் கூலிப் படையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்டுள்ளது நன்குதெரிகிறது.

கொலைசெய்யப்படுபவர் யாராயினும், அதற்கு கொள்கையோ, அரசியலோ காரணமாயினும், கொல்லப் பட்டவரின் தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஏற்படும் இழப்பும், துயரமும் பொதுவானதுதான். கொள்கை எதிரிகளை தீர்த்துக் கட்டுவது என்கிற நிலை, அதுவும் கூலிப்படைகொண்டு கணக்குத்தீர்ப்பது என்று போனால், அது நமது சமூக, அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும். எனவே தான் இப்பிரச்சனையை தீவிரமாக கையாண்டு கொலையாளிகளையும், அவர்களை பின்னின்று இயக்கியவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

பாஜக. பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதன் பின்னணியை கண்டு பிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்..

மேலும், ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோரமரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடிதுடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாஜக.,வினருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.