நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்காக முதல்வர் முயற்சி – அண்ணாமலை

” தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்கத் தான் இல்லாத ஹிந்தித் திணிப்பை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்து உள்ளார். இதனை மக்கள் ஏற்கவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இல்லாத ஹிந்தித் திணிப்பு எனக்கூறி, தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பெயிண்ட் டப்பாவை ஏந்திய சிலரைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் இன்னும் உணரவில்லை. தனது கட்சியின் பொதுச்செயலாளர் பேச்சை ஸ்டாலின் தவற விட்டுவிட்டது போல் தெரிகிறது. அவர் தான் ஹிந்தியை முன்னிறுத்துகிறார். தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையைத் தான் வலியுறுத்துகிறது. இதன்படி எந்த இந்திய மொழியையும் மூன்றாவது மொழியாக படிக்கலாம்.

மாநிலத்தில் இரண்டு வேறு விதிகள் ஏன்? தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி படிக்க வாய்ப்பு உள்ள போது, அதனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க மறுப்பது ஏன்?இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும், இத்துடன் தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் துரைமுருகன், ” பார்லிமென்டிற்கு போக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் பேசத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்,” எனக்கூறியுள்ளார். அந்த மொழி தெரியாத எம்.பி.,க்கள் படும் பாடு குறித்தும் துரைமுருகன் விளக்கி இருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...