தமிழகத்தில் TASMAC மதுவினால் ஏற்படும் பாதிப்புகளும், சமூக அவலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்பாதிப்பு பெரியவர்களைத்தாண்டி, இளைஞர்களைத்தாண்டி, மாணவர்களைத்தாண்டி குழந்தைகளையும் நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. சமூகம் பயந்து கொண்டிருக்கிறது.
சாலைகளில் விபத்தினால் பாதிப்பு ஏற்படுவதற்கு ஹெல்மெட் மட்டுமே காரணமாக இல்லையென்றாலும், ஹெல்மெட் அதிகக் காரணமாக இருப்பதால் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை மக்கள் விரும்பி அணியும் நிலை வர வேண்டும். தலையைக் காக்க வேண்டும் என விரும்ப வேண்டும்.
அதே நேரத்தில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் அந்த பாதுகாப்பை பெற்றுக் கொள்ள அரசு ஆவன செய்ய வேண்டும். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. உடனே அத்தனை பிரச்சனைகளையும் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் இன்று விபத்திற்கும், சமூக அவலங்களுக்கும் காரணமாக இருக்கும் மதுவை ஒழிக்காமல் இந்தக் குற்றங்களை ஒழிக்க முடியாது! அதனால் எவ்வளவு விரைவாக மது ஒழிக்கப்படுவது இன்று அவசியமாகிப் போகிறது.
தமிழகத்தில் உள்ள அத்தனை TASMAC கடைகளையும் மூட வேண்டும். ப+ரண மதுவிலக்கோடு தமிழகம் விளங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி காலை 10.30 மணிக்கு தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அத்தனை மாவட்டங்களிலும், மாவட்டத்தில் உள்ள மண்டல்களிலும் TASMAC கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாஜக தொண்டர்களோடு, சமூக ஆர்வலர்களும், திரளாக பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். அனைத்து TASMAC கடைகளும் மூடப்படும் வரை பாரதிய ஜனதா கட்சி போராட்டம் தொடரும்.
இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.