புயல் தடுப்புக்காக ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு

  புயல் தடுப்புக்காகவும், கட்டமைப்பு களுக்காகவும் கடலூரில் ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனைகள் குறித்த ‘மோடியின் விதை’ என்ற குறும்படசிடி-யை கோவையில் உள்ள ஈச்சனாரியில் வெளியிட்ட பின்பு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியா முழுவதும் வெளியிடப்படும் ‘மோடியின் விதை’ குறும் படம், இளைஞர் அணி மற்றும் ‘மேக் இன் இண்டியா’ திட்டம் மூலமாக அனைத்து மொழி களிலும் வெளிவர உள்ளது. முதல் முறையாக தமிழில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத மாற்றுசக்தி உருவாக வேண்டும் என்ற தேவையை பாஜக அங்கம் வகிக்கும் அணியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். என்னைப் பொறுத்த வரை, 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும். இது தான் மக்களின் விருப்பமாகவும் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் 2 இடங்களைக் கூட பெறாத போது பாஜக.,வும், பா.ம.க.,வும் தலா ஒரு இடத்தை பெற்றன. 19.5 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

எனவே, அதேகூட்டணி தொடர வேண்டும். மக்கள் நலக்கூட்டணி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

கடலூர் வெள்ள சேதத்தை பார்த்து விட்டு திரும்பும்போது, சென்னை நகரம் மற்றொரு கடல் ஊராக இருந்தது. கடலூரையும், சென்னையையும் வேறுபடுத்தி பார்க்கமுடியாத அளவில் கட்டமைப்புகள் உள்ளன. இதில், ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வில்லை.

புயல் தடுப்புக்காகவும், கட்ட மைப்புகளுக் காகவும் கடலூரில் ரூ.600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். அதே சமயம், மாநில அரசும் இழப்பு அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவேண்டும்.

நடைமுறையில் செய்ய வேண்டியதை தமிழக அரசு செய்ய வேண்டும். ஆர்கே.நகர் தொகுதிக்காவது முதல்வர் நேரில்சென்று மக்களின் நிலையை பார்வையிட வேண்டும். விவசாயக்கடன் தள்ளுபடி, புதியவீடுகள், பேரிடர்தாக்கும் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது.

இழப்பீடுகளுக்காக போராடும் மக்கள் மீது காவல் துறை அடக்கு முறையோடு நடந்து கொள்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டிவிட்டர் இணைய தளத்தில் தனது வருத்தத்தையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துவிட்டுதான், பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மத்திய அரசின் நிவாரணம் நிச்சயம் கிடைக்கும்.

மதுரையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டம், தமிழகம் முழுவதும் எந்தெந்த அளவில் உள்ளது என்பதை அரசு விரிவாக விசாரிக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...