பால் தாக்கரேவுக்கு நினைவிடம் அமைக்கபடும்

  மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மேயர்பங்களா பகுதியில், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் அமைக்கபடும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது.  இந்நிலையில், பால் தாக்கரேயின் 3-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மாநிலமுதல்வர் தேவேந்திர பட்னா விஸும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் நேற்று அஞ்சலிசெலுத்தினர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதல்வர் பட்னாவிஸ் கூறும் போது, “பாஜக, சிவசேனா கூட்டணிக்கு வித்திட்டவர் பால்தாக்கரே. அனைவரும் மதிக்கும் வகையில் மாநிலத்தை வளர்த்தெடுக்க எங்களுக்கெல்லாம் அவர் வழிகாட்டியாக விளங்கினார். அவரதுசேவையை அங்கீகரிக்கும் வகையில் மேயர்பங்களா பகுதியில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்படும்” என்றார்.

இதுதொடர்பாக ட்விட்டரில், “மக்களின் நலனுக்காக பால் தாக்கரே பாடுபட்டார். பெரும்பாலான மக்களால் மதிக்கப்படும் தலைவராக விளங்கினார். அவரது நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...