நகர திட்டமிடலில் இருக்கிற முக்கிய பிரச்சினை வெளிப்படையாக தெரிகிறது

 கன மழையால் ஏற்பட்ட சேதம்குறித்து தமிழக அரசு இது வரை மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வில்லை என மத்திய மந்திரி நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிர மடைந்துள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கின. பல இடங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப் பட்டது.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் கன மழையால் ஏற்பட்ட சேதத்தையும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு செய்யப்பட்டு வரும் நிவாரண பணிகளையும், பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதா ராமன் நேற்று காலை சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம், முடிச்சூர் அருகே உள்ள சிடிஓ காலனி, சசி வரதன்நகர், தர்கா சாலை பகுதிகளை பார்வையிட்டார்.

தெருவில் தேங்கிநின்ற மழை நீரில் நடந்து சென்று வெள்ளசேதங்களை பார்வையிட்ட அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அந்தபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் அவரிடம், தங்கள் பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரியாக நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர், வெள்ளபாதிப்பு பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து, அதேபகுதியில் மழைநீர் செல்வதற்காக சாலையை தோண்டி எடுத்தபகுதியை பார்வையிட்டார். பின்னர் அங்கு உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டார். இதையடுத்து தாம்பரம் முடிச்சூர்பகுதி அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருக்கும் பொதுமக்களிடம், மருத்துவ வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படுகின்றனவா என்பது குறித்தும் கேட்டார். அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

இந்த பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கிற அளவுக்கு இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை. மழை நீருடன், சாக்கடைநீரும் கலந்து இருக்கிறது. மழை தீவிரமாக இருந்தபோது உணவு பொட்டலம் வழங்கினார்கள். அதுவும் சென்றடைய வில்லை. மழை வரப் போகிறது ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொன்ன அறிவிப்புகள்கூட சரியாக சென்றடையவில்லை. இந்த பிரச்சினை மட்டுமல்லாது நகர திட்டமிடலில் இருக்கிற முக்கிய பிரச்சினை வெளிப்படையாக இதிலிருந்தே தெரிகிறது. மேற்கிலிருந்து கிழக்குநோக்கி சமுத்திரம் செல்லும் பாதை இங்குதான் இருக்கிறது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இந்த பகுதிகளில் 2 அல்லது 3 குளங்கள் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு வரக்கூடிய நீர்ப் போக்கு தடுக்கப்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. குளத்துக்கு வரக் கூடிய நீர்போக்கு பாதையில் சிமெண்ட் சாலை அமைத்து குளத்துக்கு நீர் வருவதற்கான வழி இல்லாமல் செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் இந்தபகுதிகளில் வந்திருக்கிறார்கள் ஆனால், மக்களிடம் அவர்கள் எந்தவித கருத்தும் கேட்க வில்லை என்று சொல்கிறார்கள். குடிசை வாழ் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாமத மாகத்தான் அரசு விழிப்படைந்து இருக்கிறது என்று இதன் மூலம் தெரிகின்றது.

வானிலை கொடுத்த தகவலை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லவிதமாக எடுத்திருக்கலாம். அப்படி எடுத்திருந்தால் மக்கள் இவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...