பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை

பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விரும்புகிறது

அண்டை நாடான பாகிஸ்தானுடன் பரஸ்பர நல்லுறவையும், நம்பிக்கையையும் பேணவேண்டும் என்று இந்தியா எப்போதும் விரும்புகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதுதான் சிறந்தவழி என்று மத்திய அரசு கருதுகிறது.

அந்த அடிப்படையில் தான், கடந்த ஆண்டு மே மாதம் 26–ந்தேதி நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்புவிழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைக்கப்பட்டார். அதன்பிறகு ரஷியாவில் உள்ள உபா நகரில் பிரதமர் மோடியும், நவாஸ்ஷெரீப்பும் சந்தித்து பேசினார்கள். கடந்த நவம்பர் 30–ந்தேதி பாரீஸ் நகரில் நடைபெற்ற உலக பருவ நிலை உச்சிமாநாட்டின் போதும் அவர்களுடைய சந்திப்பு நடந்தது.

அதன்பிறகு தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் சந்தித்து தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாகத் தான், சமீபத்தில் இஸ்லாமாபாத் சென்றிருந்த நான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும், வெளியுறவுமந்திரி சர்தாஜ் அஜீசையும் சந்தித்துபேசினேன்.

இந்த பிராந்தியத்தில் அமைதியும், நிலைத் தன்மையும் நிலவ அண்டை நாட்டுடன் சுமுகமான நல்லுறவை பேணுவது அவசியம் ஆகும். நல்லுறவை மேம்படுத்துவதற்கு இடையூறாக சிலஅம்சங்கள் (தீவிரவாத குழுக்கள்) இருந்தபோதிலும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இருநாடுகளும் விரிவான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும் என்று இரு தரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ள அம்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புகின்றன.

இந்தியாவுடன் உறவை மேம்படுத்து வதற்கான முயற்சியை பாகிஸ்தான் தொடங்கி இருக்கிறது. இந்தியாவும் அதையேவிரும்புகிறது. இதற்கு பாராளுமன்றம் ஆதரவு அளிக்கவேண்டும் இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

 பாகிஸ்தான் தலைவர்களை தான் சந்தித்துபேசியது தொடர்பாக மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...