கெஜ்ரி வாலின் விமர்சனத்திற்கு பாஜக கடும்கண்டனம்


பிரதமர் மோடி மீதான முதலமைச்சர் கெஜ்ரி வாலின் விமர்சனத்திற்கு பாஜக  கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
 

கெஜ்ரிவால் கூறியுள்ள குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, ஆதாரமற்ற புகார்களை கெஜ்ரிவால் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வில்லை என்று விளக்கமளித்தார்.
 

சிபிஐ அதிகாரிகள் சட்டத்திற்குட் பட்டே செயல்படுவதாகவும், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு மிகவும் மோசமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யா, ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் கேஜரிவால் கரைபடிந்துள்ள தமது கட்சி எம்.எல்.ஏ.க்களையும், அதிகாரிகளையும் பாதுகாக்க போராடி வருகிறார். இதனால் அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த 'யூ-டர்ன்' (தனது கருத்தை மாற்றி கொள்ளுதல்) விருது வழங்கலாம் என்றார்.

தில்லி முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மீது கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே சிபிஐ அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதற்கு ஏன் கேஜரிவால் குழப்பமடைகிறார்.

அவரது செயல்பாடுகளும், பேச்சுகளும் அவர் குழம்பிய நிலையில் இருப்பதையே காட்டுகிறது என்றார்.

அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்ற அமைச்சர் ஜித்தேந்திர சிங், அவை வெட்கக்கேடானது என்றார்.

சிபிஐ என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு,  ஆம் ஆத்மி கட்சியினர் கவலைப்படவேண்டாம். சிபிஐ தனது கடமையை தொடர்ந்து செய்யும் என்றார்.

ராஜேந்திரகுமார் மீது ஆம் ஆத்மி உறுப்பினரே புகார் அளித்துள்ள நிலையில், தற்போது அக்கட்சியினர் என்ன செய்ய போகின்றனர் என்றார் நாயுடு.

அரசியல் சாசனத்தில் மிகமுக்கிய பதவியில் இருக்கும் கெஜ்ரிவால் மோடியை கோழை என கூறியது மிகவும் கண்டிக்கதக்கது என கூறிய ரவி சங்கர்பிரசாத்,இதற்காக கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.