சுகாதாரத்தை பேணும் வகையில் தெருவோர உணவு விற்பனையாளர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை டெல்லியில் மத்தியஅரசு தொடங்கியுள்ளது. இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் (எப்எஸ்எஸ்ஏஐ) சார்பில் “சுத்தமான தெரு உணவு” என்ற தலைப்பில் புதியதிட்டத்தை டெல்லியில் மத்திய அரசு தொடங்கி வைத்தது.
சாலையோர வியாபாரிகள் விற்பனைசெய்யும் உணவு தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்கும் வகையிலான இந்ததிட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா நேற்று முன்தினம் தலைநகரில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு 7 பயிற்சி நிறுவனங்கள் உதவியுடன் 40 மையங்களில் பயிற்சி அளிக்கப் படுகிறது. சாலையோரங்களில் உணவு விற்பனைசெய்யும் வியாபாரிகள் அடுத்த 4 வாரங்கள் இந்தபயிற்சியை பெற உள்ளனர். இந்தபயிற்சிக்கான உதவியை சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவத்துறை ஸ்கில் கவுன்சில் செய்துள்ளது.
இது தவிர உணவுபாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனை வழங்குவதற்கான மொபைல் ஆப்சும் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்கிவைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பேசியதாவது: நாடுமுழுவதும் 20 லட்சம் தெருவோர வியாபாரிகள் உள்ளனர். தள்ளுவண்டி உணவு விடுதிகள் நம்வாழ்வில் ஒரு அம்சமாகி விட்டது. தற்போது டெல்லி தலைநகர் மண்டலத்தில் சோதனை அடிப்படையில் 20 ஆயிரம் வியாபாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தெருவோர உணவின் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் வாடிக்கை யாளர்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும். இந்ததிட்டம் மூலம் அமைப்பு சாரா நிறுவனம் ஒன்று முறையான செய்முறை பயிற்சி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். இந்த பயிற்சி முடிவில் தெருவோர உணவு வியாபாரிகளுக்கு பதிவு அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.