பாஜக. பிரசாரத்தை மேலும் மெரு கூட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘வாய்ஸ் மெசேஜ்’

தமிழக சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் செல்போன், தொலைபேசி மூலம் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் களத்தில் தங்களை முழு வீச்சில் ஈடுபடுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, தமிழக பாஜக. சார்பிலும் தேர்தல்பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தங்கள் பிரசாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தேர்தல்பிரசாரம் மேற்கொள்ள தமிழகம் வர இருக்கின்றனர்.

பாஜக. பிரசாரத்தை மேலும் மெரு கூட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘வாய்ஸ் மெசேஜ்’ என்ற மென்பொருள் தயார் செய்யப்பட்டு, வாக்காளர்களின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்ததிட்டம் ஏற்கனவே பீகார் தேர்தலில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டது. தற்போது அசாம் மற்றும் மேற்கு வங்காள வாக்காளர்களிடம் இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இந்ததிட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பிரசாரத்திற்கு சில தினங்களுக்கு முன் ஆரம்பித்து அவரது பிரசாரத்திற்கு பின்னும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...