பலவீனப்பட்டு விடவில்லை! பலப்பட்டதால்தான் கடும் போட்டியைத் தந்துள்ளோம்

தமிழக தேர்தல் நிலவரத்தைக் கண்டு சோர்ந்துவிட வேண்டாம், இது பண பலத்துக்கும் இலவசங்களுக்கும் கிடைத்த வெற்றி. பலப்பட்டதால் தான் நான்கு தொகுதிகளில் கடும் போட்டியைத்தந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளோம், முப்பத்தி இரண்டு  தொகுதிகளில் ஆறு கட்சிகள் இணைந்த மக்கள் நலக்கூட்டணியை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளோம்.

அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தி 46 ஆயிரத்து 413 வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் பாஜக 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாஜக அதிக வாக்குகளைப் பெற்றதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தி 3-வது இடத்தை பாஜக பிடித்தது. அதில் மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது.

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 19 ஆயிரத்து 167, வாக்குகளையும் தியாகராய நகரில் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 19 ஆயிரத்து 888 வாக்குகளையும் பெற்றனர். வேளச்சேரியில் பாஜக வேட்பாளர் டால்பின் ஸ்ரீதரன் 14 ஆயிரத்து 472 வாக்குகளைப் பெற்றார்.

கொங்கு மண்டலத்தில் தாராபுரம், உதக மண்டலம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, உடுமலைப்பேட்டை ஆகிய 10 தொகுதிகளில் பாஜக 3-வது இடத்தைப் பிடித்தது.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் 33 ஆயிரத்து 113 வாக்குகளைப் பெற்றார். ஓசூரில் பாஜக 28 ஆயிரத்து 850, வேதாரண்யத்தில் 37 ஆயிரத்து 86 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கம்யுனிஸ்ட்களின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக கருதப்படும் கோவை மண்டலத்தில் 10.,இல் 8 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் கம்யூனிஸ்ட்களின் கோட்டையை தகர்த்துள்ளது பாஜக.

இருப்பினும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பெறத் தவறியதால் பாஜக.,வின் வாக்குகளை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தாரைவார்த்தது போக 2.8 சதவித வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் பாஜக  பலவினப்பட்டு விடவில்லை ஒவ்வொரு மாநிலமாக பலப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இடதுசாரிகளும் காங்கிரஸும் மட்டுமே கோலோச்சிக்  கொண்டிருந்த அண்டை மாநிலமான கேரளாவில் முதல் முறையாக பாஜக தடம்பதித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான ஓ.ராஜகோபால் நேமம் என்ற தொகுதியில் வென்றுள்ளார். ஆறு தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது, வாக்கு சதவிதமும் 6.2 சதவிதத்தில் இருந்து 10.5.,ந்து சதவிதமாக உயர்ந்துள்ளது.

மேற்குவங்கத்தில் பாஜக.,வின் வாக்கு  4.6 சதவீதத்தில் இருந்து 10.2 ஆக அதிகரித்துள்ளது. 60 தொகுதிகளில் 20000.,க்கும் அதிகமான வாக்குகளையும், 262 தொகுதிகளில் 10000 க்கும் அதிகமான வாக்குகளையும், மூன்று தொகுதிகளில் வெற்றியையும் பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்ததால் பாஜகவை விட வெறும் இரண்டு சதவித வாக்குகளை (12.3%) மட்டுமே கூடுதலாக பெற்றபோதிலும் 43 தொகுதிகளில் வென்றுள்ளது.  

மேலும் பாஜக அசாமில் ஆட்சியையே பிடித்துள்ளது, மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 86 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி  பெற்றதன் மூலம் 15.,ந்து வருடமாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்த தருண் கோகோய்யின்  காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக வடகிழக்கு மாநிலத்தில் பாஜக தடம்பதித்துள்ளது.  

இதுவரை தாமரை மலராத இடங்களில் இருந்தெல்லாம் ஒன்று, மூன்று என மாலரத்தொடங்கி விட்டது. அஸ்ஸாமில் பூத்து குலுங்கவே தொடங்கிவிட்டது. இது எதைக் காட்டுகிறது வாக்காளர்கள் நாடெங்கிலும் பரவலாக பாஜக.,வின், நரேந்திர மோடி அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்பதையே காட்டுகிறது. எனவே தமிழக  வாக்காளர்களின் முழு நம்பிக்கையைப் பெற நாம் மேலும் தயார் ஆகவேண்டும், கட்சியை நாம் மேலும் தயார்ப்படுத்த வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

பாஜக தேர்தல் வரலாறு

1967-ல் 24 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜன சங்கம் 22 ஆயிரத்து 745 வாக்குகளைப் பெற்றது. 1980-ல் ஜனசங்கம் பாஜகவாக மாறிய பிறகு 10 தொகுதிகளில் போட்டியிட்டு 13 ஆயிரத்து 177 வாக்குகளை மட்டுமே பெற்றது.

1996 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரம் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் பாஜக அடியெடுத்து வைத்தது. 2001-ல் திமுக கூட்டணியில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4-ல் வென்றது.

தனித்துப் போட்டியிட்டு 2006-ல் 2.02 சதவீதம், 2011-ல் 2.22 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக தற்போது 2.8 சதவீத வாக்குகளைப் பெற்று அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமகவுக்கு அடுத்த கட்சியாக உருவெடுத்துள்ளது. தேமுதிக, மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பாஜகவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...