நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று எதிர் கட்சிகள், மற்றும் ஒரு சில ஊடகங்கள் ஆளுக்கொரு ஆருடங்களை சொல்லி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாஜக மேற்குவங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் படுதோல்வி அடைந்துவிட்டதாக சமீபத்தில் கூற கேட்டேன். படுதோல்வி என்று எதனை கூறுகின்றார்?, மேற்குவங்கத்தில் இதுவரை ஆட்சி கட்டிலில் அமர்ந்திடாத!, சென்ற தேர்தலில்(2016) 10 சதவிகித வாக்குகளுடன் 3 இடங்களை மட்டுமே பிடித்த பாஜக இன்று 38 சதவிகித வாக்குகளுடன் 77 இடங்களை பிடித்துள்ளதையா?.அல்லது தமிழகத்தில் காலூன்ற முடியாது, தாமரை மலரவே மலராது என்கின்ற விமர்சனங்களை எல்லாம் தூள் தூளாக்கி பாஜக 4 இடங்களில் வென்றதையா?,
முதல் முறையாக 20 வருடங்கள் கழித்து சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளதே இது ஏற்றம் அல்லவா!. இதில் வென்றவர்களும் சாதாரணமானவர்கள் அல்லவே. தனது எளிமையால் 50 வருட பொதுவாழ்வில் பெற்ற தூய்மையால் நாகர்கோவில் வென்ற காந்தியாகட்டும், அமைச்சராகவும் பல முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த போதிலும், ஊழல் கறைப்படியாத, மக்களின் மனங்களை தொடர்ந்து வென்று வரும் நயினார் நாகேந்திரனின் நெல்லை வெற்றியாகட்டும். மக்கள் சேவை மற்றும் கோவையில் தாமரையை மலர செய்ய பல வருடமாக சகோதரி வானதி கொண்ட முயற்சிக்கு கிட்டிய வெற்றியாகட்டும். சேவையின் மூலமும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மொடக்குறிச்சியில் வென்று கட்டிய மருத்துவர் சரஸ்வதியாகட்டும்.மேலும் இத்தகைய தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காட்டி தான் போட்டியிட்ட தொகுதியில் நூலிழையில் வெற்றியை தவறவிட்ட பாஜக மாநில தலைவர் முருகனாகட்டும், அனைவருமே முத்தானவர்கள். பாஜக யாருடைய முதுகிலும் சவாரி செய்யவில்லை, தன் கூட்டணி சகாக்களுக்கு நல்ல காப்பானாகவே இருந்து வருகிறது.
மேலும் பாண்டிச்சேரியில் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 7இல் வென்று முதல் முறையாக கூட்டணி ஆட்சியை அமைத்து, அமைச்சரவையிலும் பங்கு கொள்கிறது, அஸ்ஸாமில் 126இல் 77 தொகுதிகளில் வென்று தொடந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது, இதற்கு பெயர் தான் படுதோல்வியா?.
கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறமுடியாமல் போயிருக்கலாம், 15 சதவீதத்தில் இருந்து அதன் வாக்கு வங்கி 12 சதவீதமாக குறைந்திருக்கலாம், தோல்வியும் அடைந்திருக்கலாம், இதனால் பாஜக அணைத்து மாநிலங்களிலும் ஏறுமுகத்தில்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர் கட்சிகளின் ஏகோபித்த எதிர்பார்ப்பில் மண் விழுந்திருக்கலாம், இதனால்தான் இதை படுதோல்வி என்றார்கள் என்றால் சந்தோசப்பட்டு கொள்ளட்டும் .
திமுக, அதிமுக என்று மாறி, மாறி சவாரி செய்யும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் திருமாவளவன்களுக்கு வளர்ச்சி என்பதே ஒவ்வொரு தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேசி வாங்கும் தொகுதிகளின் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. ஆனால் பாஜகவின் வளர்ச்சியோ இரண்டு, மூன்று தொகுதிகளில் பெரும் வெற்றிகளின் எண்ணிக்கைகளில் தொடங்குகின்றது. 1984 இல் 2 பாராளுமன்ற தொகுதிகளில் தேசியளவில் தொடங்கிய வெற்றி , 2016இல் 3 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் தொடங்கிய வெற்றி, ஏன் 2017 இல் பாண்டிச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ .,க்களுடன் தொடங்கியதுதான் இன்றைய கூட்டணி ஆட்சி என்பதை யாரும் மறவாதீர்.
நன்றி; தமிழ்தாமரை VM வெங்கடேஷ்
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |