பிரதமர் மோடியுடன் 150 மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று யோகா செய்கின்றனர்

உலகுக்கு இந்தியா வழங்கிய மிகப் பெரும் கொடைகளில் ஒன்றான யோகா பயிற்சி, பல்வேறு நாடுகளில் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. 190 நாடுகள் யோகாவுக்கு ஆதரவளித்துவருகின்றன.

இதன் மேன்மையை உணர்ந்த ஐ.நா. சபையும், ஆண்டு தோறும் ஜூன் மாதம் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்க கடந்த 2014-ம் ஆண்டு அழைப்புவிடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதி, சர்வதேச யோகாதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்புயோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் யோகாதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் 36 ஆயிரம்பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டும் சர்வதேசயோகா தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் டெல்லியில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளது.

மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிறப்புநிகழ்வுகளில் 57 மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள். ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி உள்ளிட்ட 10 மந்திரிகள், அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசத்தில் யோகா தினத்தை கொண்டாடுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி சண்டிகாரில் நடைபெறும் சிறப்புயோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா பயிற்சிகளை செய்கிறார். இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் நடந்துவருகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

இதில் மற்றொரு சிறப்பு நிகழ்வாக பிரதமர் மோடியுடன் 150 மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று யோகா செய்ய உள்ளனர். மேலும் காயமடைந்த ராணுவவீரர்கள் 18 பேரும் சக்கர நாற்காலிகளுடன் வந்து பங்கேற்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை மன வளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற குறைபாடுள்ளவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இதற்காக சண்டிகாரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு புனர் வாழ்வு மையத்தில் கடந்த ஒருமாதமாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு பயிற்சி அளித்துவரும் நிபுணர்களில் ஒருவரான மனிஷா வர்மா கூறுகையில், ‘இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கு அதிகமான பொறுமையும், அன்பும் தேவை. பார்வையற்றோருக்கு வாய் மொழி வழிமுறைகள் மூலமும், காது கேளாத, வாய் பேசமுடியாதவர்களுக்கு அவர்களுக்கான சைகை மொழி கற்ற பிரத்யேக நிபுணர்களின் ஒத்துழைப்புடனும் பயிற்சி அளிக்கப்படுகிறது’ என்றார்.

யோகா பயிற்சியை மாற்றுத் திறனாளிகள் மிகுந்த உற்சாகத்துடன் கற்று வருவதாகவும், நாளை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க அவர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் கூறிய மனிஷாவர்மா, இந்த நிகழ்வின் போது பிரதமருடன் ‘செல்பி’ புகைப் படம் எடுக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு பயிற்சிபெறும் 190 மாற்றுத் திறனாளிகளில் ஆடை ஒத்திகை மூலம் 150 பேர் தேர்வுசெய்யப்பட்டு நாளைய நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் எனவும் மனிஷா வர்மா கூறினார்.

சண்டிகாரை போல டெல்லியில் நடைபெறும் சிறப்புயோகா நிகழ்விலும், 20 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...