சுதந்திரதினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் அங்கு நாட்டுமக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுவது மரபாக உள்ளது. சுதந்திரதின உரையை நிகழ்த்தும் பிரதமர்கள் வழக்கமாக குண்டுதுளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் நின்றுபேசுவது வழக்கம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தான் பொறுப்பேற்றதில் இருந்து மரபுகளை களைந்து திறந்தவெளியில் நின்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்துள்ளது. எனவே, சுதந்திர தினத்தன்று உரையாற்றும்போது, குண்டு துளைக்காத கூண்டினுள் இருந்து உரையாற்றவேண்டும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனை பாதுகாப்பு ஆலோசகரிடம் உளவுத்துறை தெரிவித்துள்ளது என்றும், அவரதுபாதுகாப்பு அறிவுரையை, மோடி அலட்சியப்படுத்த மாட்டார் என்பதால் அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் விவகாரம் மட்டுமின்றி, அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், ஆங்காங்கே அதிகரித்துவரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டும், உளவுத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையிலும் இந்த எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறுகாணாத பாதுகாப்பு டெல்லியில் போடப்படவுள்ளது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.