தமிழகவாலிபர் மீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது

கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் தமிழகவாலிபர் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் தமிழகவாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத் தக்கது. சட்டம்–ஒழுங்கு என்பது மாநில அரசின் பிரச்சினை. மத்தியஅரசு மாநிலத்தின் முழுஉரிமையை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கர்நாடகாவில் ஆளும் மாநில அரசு மறுபடியும் தவறு செய்கின்றனர்.

அதை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக காவிரி பிரச்சினையை வைத்துக்கொண்டு தமிழர்களை தாக்கவேண்டும். அங்குள்ள மக்களின் ஆதரவை பெறவேண்டும் என்ற குறுகியநோக்கத்தோடு கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. கர்நாடகாவில் வாழும்மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது மாநில அரசு.

பஸ்களில் செல்பவர்கள் மாநில எல்லைகளில் 5 கிமீ முன்பாகவே இறக்கி விடப்படுகிறார்கள். பஸ்சில்செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது இருமாநில அரசுகளின் கடமை. தமிழர்களின் பாதுகாப்பு நிச்சயமாக நிலைநிறுத்தப்படவேண்டும்.

தமிழர்கள் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு உள்ளனர். தமிழர்களுக்கு உரிமையான தண்ணீரில் ஓரளவுதான் வந்துள்ளது. ஆனால் இதை அரசியலாக்கி, வன்முறையாக்கி மிகமோசமான அரசியலை கர்நாடக காங்கிரஸ் அரசு நடத்துகிறது.

தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனைத்துகட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். அதில் தமிழக பாரதீய ஜனதா கட்சி கலந்துகொள்ள தயாராக உள்ளது. அதில் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் தயாராக உள்ளோம். எந்த விதத்திலும் தமிழகம் பாதிப்படைந்து விடக்கூடாது. யார் யாருக்கெல்லாம் எந்த உரிமையோ அந்த உரிமையை பெற்றுதருவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை பெற்றுதருவதில் தமிழக பாஜக கொஞ்சம் கூட பின்னடையாது.

போராட்டங்கள் மட்டுமே தீர்வாகிட முடியாது. நேரிடையாக எந்தந்த வகையில் அணுக வேண்டுமோ அந்தந்த வகையில் தமிழக பாரதீய ஜனதா கட்சி அணுகிகொண்டு இருக்கிறது. நதிநீர் பிரச்சினைக்கு மாற்றாக என்ன செய்யலாம் என்ற கருத்துகளை நாங்கள் கேட்டுவருகிறோம். அதுபற்றிய கருத்தரங்கம் அடுத்த வாரம் நடத்தப்படுகிறது.

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த பலத்தமழையால் பொதுமக்கள் தத்தளித்தனர். இப்போது அதிகமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கையை தாண்டி மழை வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். தற்போது மழைபெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெங்கு மற்றும் விஷகாய்ச்சல் அதிகமாகி கொண்டு இருக்கிறது. ஒரேநாளில் 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...