சுற்றுலா விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுற்றுலா, வணிகவிசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில் சிலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, மும்பை புறநகர் போக்குவரத்து 3வது கட்டதிட்டம் நிறைவேற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்திற்கு ரூ.8,679 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  அதன் நிறைவுபணியின் தொகை ரூ.10 ஆயிரத்து 947 கோடியாக இருக்கும் என்றும் திட்டமதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  13வது ஐந்தாண்டு திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவுபெறும்.

இதேபோன்று இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சிலசமூகங்களை சேர்ப்பதற்கான திருத்தத்திற்கும் அனுமதி அளித்துள்ளது.  அந்ததிட்டத்தின்படி, அசாம், பீகார், இமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சமூகங்களை சேர்ப்பது அல்லது அவற்றிற்கான திருத்தங்கள் மேற்கொள் வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த 36 ஆயிரத்து 384 குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம்கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. இடம் பெயர்ந்தோருக்கு சிறப்பு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5.5 லட்சம் வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...