மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த புதுச்சேரி

பிரதமரின் ‘அதிவிரைவு சக்தி’ திட்டத்தில் புதுச்சேரி இணைந்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்கட்டமைப்பினை மேம்படுத்த அதிகாரமிக்க இரண்டுகுழுக்கள் ஏற்படுத்த கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கதி சக்தி (அதிவிரைவு) திட்டம் என்ற தேசிய மாஸ்டர்பிளான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இத்திட்டம் ரூ.100 லட்சம்கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, நாட்டின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த ரயில்வே, சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத் தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒன்றிணைக்கப்பட உள்ளது. இதற்காக ‘டிஜிட்டல் பிளார்ட் பார்ம்’ துவக்கப்படுகிறது.

இந்த பிளாட்பாரத்தில் இணைய, மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுவித்து இருந்தது.இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலமும் தற்போது இணைகிறது. இதற்காக புதுச்சேரி உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானில் ஏதேனும் மாற்றங்களை அங்கீகரிப் பதற்காக, தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரமளிக் கப்பட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் எட்டுதுறைகளின் செயலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதேபோல், தொழில் வணிகத் துறைசெயலர் தலைமையில் ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு, தொழில் மற்றும் வணிகத்துறை செயலர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் 12 துறைகளின் இயக்குனர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பேற்று செயல்படும்.மேலும், மாஸ்டர் பிளானுக்கு வெளியே உள்ள 500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களை இந்தகுழு கண்காணிக்கும்.

பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டத்தினை வேகப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தஇரண்டு குழுக்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்தந்துள்ளார்.2 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், 1,600 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் ரயில்கள், எரிவாயு குழாய் நெட்வொர்க்கை 35,000 கி.மீ., வரை இரட்டிப்பாக்குதல், நாட்டில் உள்ள பொருளாதார மண்டலங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் கதிசக்தி திட்டத்தில் உள்ளடங்கி உள்ளது.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் எத்தகைய உட்கட்டமைப்பினை உருவாக்கி, தேசிய கதிசக்தி திட்டத்துடன் இணைக்கலாம் என்பதை, ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது.அத்துடன், மாநிலத்திற்கு தனியாக உட்கட்டமைப்பிற்கான மாஸ்டர்பிளானை உருவாக்கி, உயர்மட்ட குழுவான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் ஒப்புதல்பெற உள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதிகாரமளிக்கப்பட்ட குழு முன்னின்று சமாளிக்கும். விரைவான முடிவெடுத்து பிரச்னைகளை தீர்க்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...