”சோ” பத்திரிக்கைத் துறையின் ஜாம்பவான்

இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் ஜாம்பவான் ஆசிரியர் திரு. சோ. ராமசாமி அவர்களின் மரணம் இந்தியாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

ஒரு வழக்கறிஞராக, நாடக மற்றும் திரைப்பட நடிகராக, எழுத்தாளராக, அரசியல் விமர்சகராக, மாநிலங்களவை உறுப்பினராக என பல பரிமாணங்களில் அணைத்து துறைகளிலும் ஆணித்தனமாகவும், ஆழமாகவும் பணிபுரிந்து இந்திய திருநாட்டின் மேன்மை, அரசியல் நாகரீகம், அப்பழுக்கற்ற அரசியல் தூய்மை போன்ற அனைத்து விஷயங்களுக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் திரு. சோ அவர்கள்.

அவர் அவசரகால கொடுமை தாங்க முடியாமல் பிற பத்திரிகையை சேர்ந்தவர்கள் அன்றைய இந்திராகாந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு அனுசரணையாக சென்றபோது, ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்து பலர் கொடுஞ்சிறையில் தண்டனை அனுபவித்து வந்தபோது, மகாகவி பாரதியின் எழுத்துச் சிந்தனைகளை துக்ளக் பத்திரிகையில் கொண்டுவந்து இந்திய ஜனநாயகத்தில் எழுத்துப் போராட்டம் செய்தவரை இந்த எழுத்துப் போராளி.

முகமது பின் துக்ளக் போன்ற தனது நாடகம் மற்றும் திரைப்படங்களில் அன்றைய அரசியல் சூழ்நிலையை எடுத்து அவர் செய்த விமர்சனங்களும், அதனால் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வுகள் பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட வேண்டியவை.

இந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வருவது தான் சிறந்தது என்று அவர் கருதினாலும், அந்த கட்சியின் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்ட தவறாத பேனா முனைக்கு சொந்தக்காரர்.

இந்திய அரசியல் தலைவர்களோடும், (பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசியலிஸ்ட் மற்றும் பல அரசியல் காட்சிகள்) அகில இந்திய தலைவர்களோடும், பல பிரதமர்களோடும், பல முதல்வர்களோடும், தலைவர்களோடும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு கொண்டிருந்தாலும், தனிப்பட்ட நட்பு பாராட்டிவிட்டேன் என்பதற்காக, தாய்நாட்டு அரசியல் கெடுப்பவர்களின் செயலை கடுமையாக எதிர்க்கும் துணிச்சல் மிக்க போராளி.

அனைத்தையும் கொடுக்கவல்ல பல பிரதம மந்திரிகளை தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தும், அனைத்தையும் தடுக்கவல்ல எதிர்க்கட்சி தலைவர்களை தனக்கு தெரிந்திருந்தும், தனக்கென ஒன்று கூட கேட்க தெரியாத அப்பழுக்கற்ற எழுத்தாளர் திரு. சோ ராமசாமி அவர்களின் மறைவு இந்திய ஜனநாயகத்திற்கு மாபெரும் இழப்பாக நான் கருதுகிறேன்.

தான் எழுதிய எழுத்துக்களை விமர்சனம் செய்பவர்கள் தனக்கு முன்பாக அவர்களை விமர்சனம் செய்ய வைக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுக்கு ஒருமுறை மேடை அமைத்து அவர்கள் செய்யும் விமர்சனங்களை அவரே நேரடியாக கேட்டு மகிழ்ந்தும், அவர்களை மகிழ்ச்சி செய்தும், அவர்களது விமர்சனங்களுக்கு தனக்கான கருத்துக்களை எடுத்துவைத்தார்.

இந்திய திருநாடு காக்கப்பட வேண்டுமானால் அது திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனால் மட்டுமே என்று  பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய திருநாட்டின் பிரதமர் ஆவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்க தரிசன குரல் கொடுத்து மக்களுக்கு எடுத்துரைத்தவர் திரு. சோ ராமசாமி அவர்கள்.

மரியாதைக்குரிய திரு. சோ ராமசாமி அவர்களை துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த நாள் முதல் நேசித்து, அவர் எழுத்துக்கு அடிமை ஆனவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். 1991 முதல் திரு. சோ அவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். பா.ஜ.க. வளர்ச்சிக்காக பல நேரம், பல முறை உரையாடியப் போதெல்லாம் சில தெளிவான விளக்கம் அளித்து வழிகாட்டிய பெரியவர்.

இந்துத்துவம் என்பது தீண்டத்தகாதது என்றும், இந்து பண்பாடு, கலாச்சாரங்கள் ஏற்கத்தக்கது அல்ல என்றும், வேதங்கள், இதிகாசங்கள், ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் கேலிக்குரியது என்றும், மத துவேசிகள் இந்து மதத்தை அவமானப்படுத்திய போதெல்லாம் திரு. சோ. அவர்கள் அனைவரது கருத்தையும் தனது எழுத்து பலத்தால் தகர்த்தெறிந்தார். ஜாதியின் பெயரால் பெருமைக் கொள்வதோ, சிறுமை காட்டுவதோ சிறிதும் ஏற்க முடியாதது என்பதை உணர்த்த ‘எங்கே பிராமணன்’ என்ற பெயரில் நிகழ்ச்சியை தொடங்கி ஜாதி சமநிலையை காட்டியவர் திரு. சோ அவர்கள்.

அரசியல் நேர்மை, தூய்மை, நாணயம், பரிபூரண தேச பக்தி, தேசத்திற்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் மனப்பான்மை என அனைத்தையும் வலியுறுத்திவந்த ஆசிரியர் திரு. சோ அவர்களின் வழிகாட்டுதலின் வழி நடப்பதே நாம் அவருக்கு ஆற்றும் உண்மையான அஞ்சலி என நான் கருதுகிறேன்.

திரு. சோ ராமசாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் இணைந்து பணிபுரிந்த துக்ளக் குடும்பத்தினருக்கும், அவரை பின் தொடர்ந்து நாட்டை வளமாக்க நினைப்பவர்களுக்கும் அவரின் இழப்பை தாங்கும் மன வலிமையை கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...