நாம் அனைவரும் ஒரு தேசமாக நின்று வென்று காட்ட வேண்டிய தருணம் இது

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. 2006-ல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை முதலில் ஜல்லிக்கட்டைத் தடை செய்து உத்தரவிட்டது. தமிழ் நீதிபதியான ஆர் பானுமதிதான் இந்தத் தடையை விதித்தார். ரேக்ளா ரேசுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட அந்த வழக்கில், ரேக்ளா ரேஸ், எருது விடும் திருவிழா, ஜல்லிக்கட்டு என அனைத்து வகை விளையாட்டுக்களையுமே தடை செய்து தீர்ப்பு வழங்கிவிட்டார் அந்த நீதிபதி.

2009-ல் தமிழக அரசு 'தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தல் சட்டத்தை' இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்தது. இந்த சட்டப்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜனவரி, மே மாதங்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம்.

2010-ல் ஆண்டு தோறும் ஜனவரி 15-ம் முதல் அடுத்த 5 மாதங்களுக்குள் ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும், இந்த வாரியத்தின் பிரதிநிதிகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்வையிடுவார்கள் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால் கடந்த 11 ஜூலை, 2011-ல் அன்றைய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட வழி வகுத்தார்.

அன்று ஆட்சியிலிருந்தது திமுகவும், அவர்களின் கூட்டாளியான காங்கிரஸும்தான். அன்று எங்கே போனார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், மற்ற தமிழ் அமைப்புகளும்?

தொடர்ந்து 2014, மே 7-ம் தேதி (அப்போதும் காங்கிரஸ்தான் பதவியில் இருந்தது), உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு திருத்த சட்டத்தை ரத்து செய்து, ஜல்லிக்கட்டை தடை செய்தது. மேலும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றால் PCAA எனும் விலங்குகள் வதைக்கு எதிரான சட்டத்தைத் திருத்தி, காளைகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

இவை எல்லாம் நடந்தது திமுகவும் அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான்.நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, ஜனவரி 2016-ல் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் 2011- அறிவிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி ஜல்லிக்கட்டு மற்றும் மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் நடக்கும் எருதுப் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கலெக்டரின் அனுமதியோடு, 15 மீட்டர் சுற்றுவட்டத்தில் காளைகளைத் தழுவலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஜூலை 2016-ம் தேதி விலங்குகள் நல வாரியமும், பீட்டாவும் பிரதமர் மோடி அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் ஜல்லிக்கட்டுக்குத் தடைப் பெற்றனர்.

ஜல்லிக்கட்டுக்குத் தடைப் பெற்றுள்ள விலங்குகள் நல வாரியத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் அபிஷேக் மனு சிங்வி. சோனியா காந்தியின் விசுவாசி இவர். ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர்.

இதுமட்டுமல்ல, 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தது நினைவிருக்கலாம்.

ஆனால் பாஜக மட்டும்தான் தமிழ் மக்களின் உரிமையான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடைசி வரை நிற்கிறது.

இப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த வகைசெய்துள்ளது. அதற்கும் மோடி அரசு உறுதுணையாக இருந்துள்ளது. ஜல்லிக்கட்டு நிரந்தரமாக தமிழகத்தில் நடக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

பாரம்பர்ய மரபுகளைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி இது. வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை வைத்து, நமது பாரம்பர்ய கொண்டாட்டங்கள், நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் விஷம கும்பலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒரு தேசமாக நின்று வென்று காட்ட வேண்டிய தருணம் இது.

அமித் மாள்வியா (கட்டுரையாளர் பாஜகவின் ஐடி பிரிவு தேசிய தலைவர்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...