காங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, லக்னௌவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: காங்கிரஸ், சமாஜவாதி இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணியாகும். மிதிவண்டியின் (சமாஜவாதி கட்சியின் சின்னம்) பின் இருக்கையில் அமர தனதுதந்தை முலாயம் சிங் யாதவுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இடம் தரவில்லை. எனினும், மிதிவண்டியின் கைப்பிடியை அவர் காங்கிரஸ்கட்சியிடம் அளித்துள்ளார்.
சமாஜவாதிக் கட்சியில் நடைபெற்று வரும் குடும்ப நாடகமானது நகைச்சுவை காட்சியிலிருந்து சோகத்துக்கு மாறிக்கொண்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்றகொள்கைக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம்; உத்தரப் பிரதேசத்தை தலை நிமிரச்செய்வோம். மத்தியில் பாஜக ஆட்சி புரிந்துவரும் நிலையில், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையும்.


கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பாஜக அடைந்த மாபெரும் வெற்றியைப் போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு. 2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73 இடங்களில் பெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...