உண்மையான சூழலை ஆராயந்து, அறிந்துதான் முடிவெடுக்க முடியும்

ஆதரவு, எதிர்ப்பு என்று நிமிடத்துக்கு நிமிடம் மாறி வரும் அரசியல் சூழல்களால் தமிழகமே பரபரத்துக் கிடக்கிறது. ''டெல்லி மட்டுமல்ல… ஒட்டு மொத்த இந்தியாவுமே தமிழக அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது'' என்கிறார் தமிழக பிஜேபி தலைவரான தமிழிசை சவுந்தர் ராஜன். தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து அவரோடுபேசினோம்…

''தமிழக அரசியல் சூழல் உச்சபட்ச குழப்பத்தில் இருக்கிறது. காபந்துமுதல்வர் பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஒருவர் இருக்கிறார். அரசியல்சூழ்நிலை, உணர்வுப் பூர்வமான சூழ்நிலை என இரண்டு நிலைகள் உள்ளன. இதில் அரசியல் சூழ்நிலை என்பது கடந்த இரண்டுமாதங்களாக நிலையான ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த ஆட்சியில் பெரியகுறைகள் என்று எதையும் சொல்லவும் முடியாது. அதுமட்டுமல்ல,  மெரினா போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்னை, வர்தாபுயல் என்று இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்டசவாலான சூழ்நிலைகளையும்கூட திறம்படகையாண்ட ஆட்சி நிர்வாகம் என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் எளிதில் சந்தித்து தங்கள் குறைகளைச் சொல்லக்கூடிய இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தார். ஏற்கெனவே தமிழக அரசியல் பட்டுப்போயிருந்த அரசியல் நாகரிகத்தை மறுபடியும் துளிர்விடச்செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தும் தலைவராகவும் இருந்தார்.

இந்த இரண்டு மாதங்களுக்குள் தமிழக முதல்அமைச்சரை மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது? 'எனக்கு அரசியல் ஆசை துளியும்கிடையாது. முதல்வருக்குத் துணையாக மட்டுமே இருந்து வருகிறேன்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ஒருவர் இப்போது இந்த இரண்டு மாதங்களுக்குள் தானே முதல்வராக வந்துவிட வேண்டும் என்று அவசரம்காட்டுவது ஏன்? அதன் உள்நோக்கம் என்ன? இப்போது இவர்கள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால், இதை நோக்கித்தான் இவர்களது வாழ்நாள் திட்டம்இருந்ததா என்ற கேள்வி அதிகமாக எழுகிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொருத்தவரை, ஒருவரை இல்லத்தில் பணியாற்றுவதற்கும் இன்னொருவரை களத்தில் பணியாற்று வதற்கும் தயார்செய்து வைத்திருந்தார். இதில், இல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் இப்போது களத்தில் பணியாற்றப் போகிறேன் என்று வரும்போதுதான் பிரச்னையே வருகிறது.'' 

''தங்கள்கட்சியில் இருந்து யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது அவர்களது  உட்கட்சி பிரச்னைதானே?''

''அப்படியில்லை… ஒருகட்சியின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பது வேண்டுமானால், அவர்களது உட்கட்சிப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், முதல்வர் என்று வரும் போது வெறுமனே உட்கட்சிப் பிரச்னை என்று சொல்லி புறந்தள்ளி விட முடியாது. அது ஆறுகோடி தமிழர்களின் பிரச்னை; தமிழக மக்கள் நலனுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பிரச்னையாகத்தான் பார்க்கவேண்டும்.

நெடுநாட்களாக தமிழக அரசு முழுமையாக இயங்க முடியாத சூழல்தான் நிலவிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, கோர்ட் – கேஸ் என்று போய்க் கொண்டிருந்தது; அடுத்ததாக ஜெயலலிதா உடல்நலமின்றி இருந்தார்; அதற்குப்பின் இன்றைய சூழ்நிலை… இப்படியே போய்க்கொண்டிருந்தால், இந்த நிலையற்றத்தன்மை  தமிழக மக்கள் நலனுக்கு நல்லதல்ல.


சட்டசபை தேர்தல் முடிந்து ஒருவருடம்கூட முடியவில்லை. அதற்குள் சுய நல அரசியலால் ஏன் இப்படியொரு குழப்பம் விளைவிக்கப் பட்டது? ஏன் இந்த அவசரம்? அதற்கு என்ன அவசியம்? முதல்வர்பதவி என்பது நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்குத் தானே தவிர… ஆட்சி – அதிகாரத்தை கைப்பற்றி வைத்துக்கொண்டு தனது பலத்தைக் காண்பிப்பதற்கு அல்ல…!''

''ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு எம்எல்ஏ-க்களின் பட்டியலை சசிகலா கவர்னரிடம் கொடுத்த பின்னரும், ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னர் தரப்பில் இவ்வளவு காலதாமதம் ஏன்?''

''மிரட்டப்பட்டோம், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது' என்றெல்லாம் ஓ.பி.எஸ் கூறிவருகிறார். அவரோடு அந்தக்கட்சியின் அவைத்தலைவர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் இதேகருத்தைக் கூறி ஒன்றைணைகிறார்கள். ஒரு முதல்வரே மிரட்டப்பட்டுள்ளார் என்றநிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட்டனரா? என்ற கேள்விவருகிறது…. இல்லையா? நாட்டு மக்களின் எண்ணம் ஒருபக்கமாக இருக்கும் போது, எண்ணிக்கை இருக்கிறது என்பதற்காக கவர்னர் எப்படி அவசரமாக முடிவெடுக்க முடியும்? முடிவெடுத்தபின்னர் கவர்னரால் பின்வாங்கமுடியாது. எனவே, உண்மையான சூழலை ஆராயந்து, அறிந்துதான் முடிவெடுக்க முடியும். அதற்கு காலதாமதம் ஆகத்தான் செய்யும்.''

 

''ஓ.பி.எஸ் – சசிகலா இருவரில், பி.ஜே.பி ஆதரவு யாருக்கு?''

''இவருக்கு சப்போர்ட், அவருக்கு சப்போர்ட் என்றுசொல்வதற்கு நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்குத்தான் எங்கள் ஆதரவு. அப்படிமக்களின் நலன் சார்ந்த ஆதரவு என்றால் என்ன…? 'ஒருநிலையான ஆட்சி வேண்டும்' என்பது மட்டும்தான். அப்படி ஒருநிலையான ஆட்சியை இவர்கள் இருவரில் யார் கொடுக்க முடியும்? இவர்களில் ஒருவர், ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சுட்டிக் காட்டப்பட்டவர். தான் பிரச்னைக்குள்ளாக இருக்கும் போது, தன்னைப்போலவே திறம்பட செயலாற்றுபவர் இவர்தான் என்று அடையாளம் கண்டே இவரை முதல்வராக முன்னிறுத்தியிருந்தார். ஜெயலலிதா இறந்த பின்னரும்கூட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்கூட. அடுத்ததாக, நீண்ட நெடுநாட்களாக அரசியலில் தொடர்ந்து இருந்துவருபவர். தற்போதைய சூழலில் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர். ஆனால், அந்த இன்னொருவரை ஜெயலலிதா எந்த இடத்திலும் சுட்டிக் காட்டவே இல்லை.

ஜெயலலிதாவின் கொள்கைப்படியே செயல்படுகிறோம் என்று சொல்லும் போது, அந்தம்மாவின் விருப்பத்தைத் தானே இவர்கள் செயல்படுத்த வேண்டும்? மாறாக செயல்படுவது எப்படி ஜெயலலிதாவின் பணியை எடுத்துச் செல்வதாக இருக்கும்? இதில் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? என்ற எண்ணம் எல்லோருக்கும் எழுவது போல் எங்களுக்கும் எழுந்தது… அவ்வளவுதான். மற்றபடி இவங்களுக்கு ஆதரவு, அவங்களுக்கு ஆதரவு என்பதெல்லாம் இல்லை.''

''ஓ.பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக நீடிக்கவேண்டும் என்று பி.ஜே.பி ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?''

''ஓ.பி.எஸ்-க்குத்தான் எங்கள் ஆதரவு என்று சொல்வதை விட, குழப்பம் இல்லாத, நிலையான ஆட்சியாக நன்றாகத்தானே பணியாற்றிக் கொண்டிருந்த அந்த முதல்வருக்கு ஏன் ஆதரவு கொடுக்கக் கூடாது என்பதுதான் என் கேள்வி.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அரசு என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலஅரசைத்தான் ஆதரிக்கும். அந்தவகையில்தான் நாங்களும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துக்கொண்டிருந்தோம். இதில், 'ஆதரிப்பது' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன…? ஒருமுதல் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையையும் ஆதரவையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டு… பிரதமரது வழிகாட்டுதல் செயலாக்கம் பெற்று இன்றைக்கு ஜல்லிக் கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
ஊழலற்ற, நிலையான ஒருஆட்சி தமிழகத்துக்கு வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, மறுபடியும் ஊழல்கறை படிந்தவர்கள் வருவது நல்லதா? குடும்ப ஆட்சி ஒழியட்டும் என்றுதான் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். மறுபடியும் ஒருகுடும்பத்தை சார்ந்தவர்களே ஆட்சிக்கு வரலாமா? நேற்று கவர்னரை சந்திக்கச் சென்றபோது கூட சசிகலாவோட அவரது குடும்ப உறுப்பினரும் சென்றிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.!''

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...