அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா கட்சிக்கோ,மத்திய அரசுக்கோ பங்கில்லை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா கட்சிக்கோ,மத்திய அரசுக்கோ பங்குஇல்லை என மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

இந்தியாவில் உருவாக் குவோம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமுகநிகழ்வு மற்றும் செய்திகளுக்கான ஹெüடி டூ  புதியசெயலி அறிமுக விழா புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட பழங்குடியின மக்கள் விவகாரத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் புதிய செயலியைத் தொடங்கிவைத்து பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ளசெயலியைக் காட்டிலும்  ஹெüடி டூ செயலியில் 1 லட்சம் பேரை இணைக்க முடியும். பொதுமக்கள் 36 நாடுகளின் பணத்தை இச் செயலியின் மூலம் செலுத்த முடியும். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக்கொண்ட செயலியை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைவதாகத் தெரிவித்தார்.

இந்தவிழாவில் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் துணை தலைமை தணிக்கை அதிகாரி எஸ்.சத்திய மூர்த்தி,  நடிகர் விஷால், வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ்,  டிஐடபிள்யு மேலாண் பங்குதாரர் மோஹித் ரல்ஹான், ஹெüடி டூ தலைவர் சேவியர் பிரிட்டோ, தலைமை செயலர் அதிகாரி சுதாகர் ராஜா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கு அடுத்தது யார்வாரிசு எனத் தெரிவிக்காமல் மறைந்ததால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த உட்கட்சிவிவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ பங்கில்லை. சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது வருமானவரித்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாரதிய ஜனதாவை குற்றம் சாட்டுவது திசை திருப்பு முயற்சியாகும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.