கப்பல் போக்கு வரத்தை மேம்படுத்த நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்தை தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும்

கப்பல் போக்கு வரத்தை மேம்படுத்த வசதியாக, நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்தை தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானிகுழுமம் சார்பில் ரூ.1,270 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சரக்குப்பெட்டக முனையம், செட்டிநாடு குழுமம் சார்பில் ரூ.151 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள பலசரக்கு முனையம் மற்றும் சில புதியதிட்டங்களை துறைமுக வளாகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு துறையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியது:புதிய முனையங்கள் திறக்கப் பட்டுள்ளதன் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் கையாளும்திறன் ஆண்டுக்கு 50 மில்லியனை விரைவில் எட்டும். வாஜ்பாயின் கனவுத் திட்டமான இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் தேசிய நெடுஞ் சாலையுடன் இணைக்கும் பணியில் அமைச்சகம் முனைப்பு காட்டிவருகிறது.


கடந்த ஆண்டு மட்டும் 16,800 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டள்ளன. நீர்வழி பாதைகளை இணைப்பதன் மூலம் போக்குவரத்து செலவை கணிசமாகக் குறைக்கமுடியும். இதற்காகவே ரூ.16 லட்சம் கோடி மதிப்பீட்டிலான சாகர் மாலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் சிறு துறை முகங்களை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். இவற்றை பெரிய துறை முகங்களுடன் இணைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைச் செயல்படுத்திட வசதியாக நீர்வழிப் போக்கு வரத்துக் கழகத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இதற்கான நிதி, கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.200 கோடி மத்திய அரசு அளிக்கத் தயாராகஉள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையும், பிறகு திருவனந்தபுரம், கொச்சிவழியாக மும்பைவரை கூட பயணிகள், சுற்றுலா கப்பல்களை இயக்கிட இயலும்.


எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதி ஏற்பட்டவிபத்தால் சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீட்டு தொகையை இன்னும் 10 நாள்களில் காப்பீட்டுநிறுவனங்கள் வழங்கும். மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதன் மூலம் அதிகலாபம் ஈட்டமுடியும். இதற்கென ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்க அரசு தயாராக உள்ளது.

சாகர்மாலா திட்டத்தின்கீழ் கிழக்கிலும் மேற்கிலும் கப்பல்கள் தடையின்றி சென்றுவர சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் அவசியமானது. ஆனால் ராமர் பாலத்திற்குச் சேதம் இல்லாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தவே மத்திய அரசு விரும்புகிறது.உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்தவழக்கின் தீர்ப்புக்கு பிறகே இத்திட்டம் குறித்து மத்திய அரசு இறுதிமுடிவு எடுக்கும் என்றார் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...