மோடியின் திட்டத்தால் இந்தியா மிகவும் கவர்ச்சிகரமான நாடாக மாறும்

சிக்கிம் எல்லைப்பிரச்னையில் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் மேக் இன் இந்தியா, ஜிஎஸ்டி திட்டத்தால் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியா மிகவும் கவர்ச்சிக ரமானதாக மாறும் என சீன அரசுஊடகம் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில் சீனா தனது படைகளை குவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவும் படைகளை குவித்துள்ளதால் போர்பதற்றம் நிலவுகிறது.

கடந்த சில தினங்களாக இந்தியாவை கடுமையாக விமர்சித்துவந்த சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளிதழ், இந்தியாவுக்கு ஒரு "கசப்பானபாடம் கற்பிக்கப்பட வேண்டும்." மேலும், இந்த மோதல்கள் தீவிரமடைந்தால், இந்தியா 1962 போரில் சந்தித்த இழப்பை விட "அதிக இழப்புக்களை" சந்திக்கும் என்று எச்சரித்தது. இதற்கு இன்றைய இந்தியா "1962-ல் இருந்து வேறுபட்டது" என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லி பதிலளித்தார்.

இந்நிலையில், குளோபல் டைம்ஸ் நாளிதழ் இன்றைய தலையங்கத்தில், பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" மாற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை ஆகிய திட்டங்கள், இந்தியாவின் வரிசீர்திருத்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், குறைந்தவிலையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சீனாவைவிட்டு இந்தியாவை நோக்கி நகர வழிவகுக்கும் என்று பாராட்டிள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திரமோடி 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவில் உருவாக்குவோம் "மேக்இன் இந்தியா" என்ற திட்டத்திற்கு பின்னர், நாட்டை ஒருங்கிணைப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுவருவதுடன் உலகளாவிய வியாபாரங்களுக்கான கவர்ச்சிகரமான உற்பத்தி இலக்கைநோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

புதிய வரி சீரமைப்பானது மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கவிக்கும்வகையில் அமையும் என தெரிவித்துள்ள சீன ஊடகம், இந்தவரி மூலம் பல வரிகள் ஒருவரியாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தேசிய அளவில் பொதுசந்தைக்கு அடித்தளமிட்டுள்ள இந்தியா, உற்பத்திபோட்டி திறனையும் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

"குறைந்த விலையில் உற்பத்தி சீனாவில் இருந்துபடிப்படியாக மாறிக்கொண்டே இருப்பதால், சீனாவை அடுத்த உலக தொழிற்சாலை" என்று மாற்றிக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...