பெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும்

பெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினசரிநிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்ததாகக் கூறி அரசுக்குஎதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தவிவகாரம் குறித்து விளக்கமளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி மற்றும் இர்மா புயல்களால் பெட்ரோலியப்பொருள்கள் உற்பத்தி குறைந்ததன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை நிச்சயமற்றதாய் இருக்கிறது. இதனால், பெட்ரோலிய பொருள்கள் விலை கூடியது. தற்போது அதன்விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விலை குறையும் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கிவைத்துப்பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’தொலைதொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி அனைத்து துறைகளிலும் வணிகம் செய்யும்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு, நுகர்வோருக்கு நன்மைகிடைக்கிறது. அதேபோல் தொலைத் தொடர்புப் புரட்சியால் சரியான கொள்கைகளின் உதவியோடு இயங்கும் சுதந்திரமான சந்தைகள் நுகர்வோருக்கு எப்போதும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் வீடுகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்கும் திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்'' என்று பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...