ராஜஸ்தான் மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந் தானம் போட்டியிடுவார்

மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, பிரதமர் மோடியின் மந்திரி சபையில் கேரள மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கபட்டது. அப்போது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கண்ணந் தானத்தை பிரதமர் மோடி மத்திய சுற்றுலாதுறை மந்திரியாக நியமித்தார்.

பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் உறுப்பினராக இல்லாத அல்போன்ஸ் கண்ணந்தானம் உடனடியாக மந்திரிபதவி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அல்போன்ஸ் கண்ணந்தானம் ஏதாவது ஒருதொகுதியில் இருந்து எம்பி.யாக தேர்வு செய்யப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மேல்சபை எம்பி.யாக தேர்வுசெய்யப்பட்ட வெங்கையா நாயுடு சமீபத்தில் துணை ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டார். இதனால் அவர் ராஜஸ்தான் மாநில மேல் சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் அந்தபதவி காலியாக இருந்தது. இதற்கு தேர்தல்நடக்க உள்ளது. இந்ததேர்தலில் மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானத்தை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்த கட்சி மேலிடம் முடிவுசெய்துள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று அறிவித்தார்.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்.எல்.ஏ.க்களில் 160 பேர் பா ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்எல்ஏ.க்களே உள்ளனர். எனவே இங்குநடக்கும் மேல்சபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் உறுதியாக வெற்றிபெறுவார். வேட்பு மனுதாக்கல் செய்ய வருகிற 6-ந்தேதி இறுதிநாளாக இருக்கும். இதில் போட்டி இருந்தால் தேர்தல்நடைபெறும். இல்லையேல் அல்போன்ஸ் கண்ணந்தானம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்படுவார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...