சேதமடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

குமரிமாவட்டத்தில் நேற்று சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்ததால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் மாவட்டத்தில் பெரும்சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில்சென்று பார்வையிட்டார். நாகர்கோவிலில் இருந்து காரில்புறப்பட்ட அவர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது பார்வதிபுரம், சுங்கான்கடை பகுதியில் சாலையில் விழுந்துகிடந்த மரத்தை உடனே வெட்டி அகற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார்.

சில இடங்களில் மரங்களை அகற்றும் பணி நடந்தது. அந்தபணிகளை ஆய்வு செய்தவர் பணிகளை விரைந்து முடிக்கும்படி வலியுறுத்தினார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகளும் சென்றனர்

இதனைதொடர்ந்து  தென் மாவட்டங்களில் போதியஅளவில் மீட்புகுழுக்களை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜுவிடம் கூறினார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்தபகுதிகளை பற்றியும் விளக்கினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை  நேரில் சந்தித்து , கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்று ஓகி புயலினால் சிக்குண்டு கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களை காக்கவும், போர்கால நடவடிக்கையில் மீட்புப்பணியில் ஈடுபட போதியளவு மீட்புக்கப்பல், கப்பற்படை வீரர்கள் மற்றும் விமானப் படையை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினார்.அதற்குபதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக வேண்டிய உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...