பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட்காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ் தீனத்திற்கு எப்பொழுதும் உயரிய இடம்வழங்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி பாலஸ்தீன நாட்டுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளார்.  அங்கு அவர் அந்நாட்டு அதிபர் மகமூத் அப்பாசை சந்தித்துபேசினார். இருநாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  இந்தசந்திப்பிற்கு பின்னர் பாலஸ்தீன நாட்டின் உயரியகிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.  பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் இதனை வழங்கினார்.

இந்த விருதினை பெற்றுகொண்ட பின் பிரதமர் மோடி பேசும்பொழுது, பாலஸ்தீனம் இந்தியாவுக்கு மரியாதை செலுத்தியுள்ளது.  இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் எனக்கு இந்த உயரியவிருது வழங்கப்பட்டு உள்ளது.  பாலஸ்தீனத்துடனான நட்பின் அடையாளம் இந்தவிருது என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு எப்பொழுதும் உயரிய இடம் வழங்கப்பட்டு உள்ளது.  பாலஸ்தீனம் விரைவில் அமைதியான முறையில் சுதந்திரநாடாகி விடும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான உறவுகள் நீண்டகாலம் வரை நிலைத்து நின்றுள்ளது.  இந்திய மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே இந்தவருடம் மாணவர்கள் பரிமாற்றம் 50ல் இருந்து 100 ஆக இரட்டிக்கப்படும்.  துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக பாலஸ்தீன மக்கள் உள்ளனர் என கூறியுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பிரதமர் ஆவார்.

பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட்காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.  பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் இதனை வழங்கினார். இந்தவிருது வெளிநாட்டை சேர்ந்த அரசர்கள், தலைவர்கள் மற்றும் அதற்கு இணையான பதவி வகிப்போருக்கு வழங்கப்படும் உயரிய விருது.  கடந்தகாலங்களில் சவூதி அரேபிய அரசர் சல்மான், பஹ்ரைன் நாட்டின் அரசர் ஹமாத், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பலருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...