சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம்

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் பொய் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில், கடந்த 2007, மே 18-ம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்த தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பின் போது வெடிக்காத 2 சக்தி வாய்ந்த வெடி குண்டுகளையும் போலீசார் பறிமுதல்செய்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் வழக்கில், அசிமானந்த்,  தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் இருவர் தப்பிய நிலையில் 5 பேர் மீதான வழக்கு ஹைதராபாத் தேசியபுலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என்று  கூறி நீதிமன்றம் அனைவரையம் விடுதலைசெய்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...