விரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கும்

தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததுடன், இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை, 'நான்சென்ஸ்' என்றும் கண்டித்தார்.


சென்னை, ராஜ்பவனில், கவர்னர் நேற்றுஅளித்த பேட்டி:நான் கவர்னராக பதவியேற்று, ஆறுமாதங்கள் முடிகிறது. ஒரு பெண்ணின், தொலைபேசி பேச்சு தொடர்பான பிரச்னையில், ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சந்தானம் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர் சிறந்த அதிகாரி; நேர்மையாக விசாரணைநடத்தி, 15 நாட்களில், அறிக்கை தாக்கல்செய்வார். அந்த அறிக்கை, எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல், பத்திரிகைகளுக்கு வழங்கப் படும்.தேவைப்பட்டால், செய்தியாளர் சந்திப்பு நடத்துவோம். மதுரை காமராஜர்பல்கலை, எங்கள் அனுமதி இல்லாமல், விசாரணை குழுவை அமைத்தது. விசாரணை யின் பாதை மாறாமலிருக்க, அந்தக் குழு ரத்து செய்யப் பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், யாருக்கு தொடர்பிருந் தாலும், அவர்கள், எந்த அதிகாரத்தில் இருந்தாலும், மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த பெண்ணின் பேச்சில், கவர்னர் பெயர் இருப்பதாக கூறுகிறீர்கள். இதெல்லாம், முட்டாள் தனமான, 'நான் சென்ஸ்' பேச்சு. நான், 78 வயதானவன். எனக்கு பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். மூத்த குடிமகனான, என் பெயரை, யாரும் தவறாக பயன் படுத்த கூடாது. இந்த குற்றச் சாட்டை கூறுவோருக்கு, 'கவர்னர்' என்ற, மரியாதை கூடவா இல்லை.நீங்கள் கூறும் பெண்ணை, நான் பார்த்ததுகிடையாது; அவர் முகம்கூட, எனக்கு தெரியாது. இது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

என்னைப்பற்றி நாட்டு மக்களுக்கு, நன்றாக தெரியும். எம்.பி.,யாக இருந்துள்ளேன்; உங்களைப் போன்று, நானும் பத்திரிகையாளன். என் மீதான குற்றச் சாட்டை புறக்கணிக்கிறேன். என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில், தவறாக பேசவேண்டாம். இந்த பிரச்னையை பொறுத்த வரை, பல்கலைவேந்தர் என்ற அடிப்படையில், விசாரணைக் குழு அமைக்க, எனக்கு முழுஅதிகாரம் உள்ளது.அந்த அடிப்படையில், விசாரணை குழுவை அமைத்துள்ளேன். விசாரணையில், யாருடைய தலையீடும் இருக்காது.

மதுரை, காமராஜர் பல்கலை துணைவேந்தர், பதிவாளர் மற்றும் உயர் கல்வித்துறையினர் அனைவரும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவர். விசாரணை குழுவில், பெண் ஒருவர் இடம்பெறவேண்டும் என்றால், எந்த தடையுமில்லை. விசாரணை அதிகாரி, சந்தானம், சுதந்திரமாக முடிவு எடுத்து கொள்ளலாம்.விசாரணை குழு அமைப்பது தொடர்பாக, மாநில அமைச்சர்களிடம், கலந்தாலோசிக்க வேண்டியதில்லை. கவர்னருக்கு, அனைத்து அதிகாரமும் உள்ளது.

இந்தபிரச்னை தொடர்பாக, பத்திரிகையாளர் கள் உட்பட, யார் வேண்டுமானாலும், என்னை விசாரிக்கலாம்.விசாரணை முடிந்தபின், தேவைப்பட்டால், அரசியல் கட்சிகள் கேட்பது போல, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும், நான் தயாராக உள்ளேன். எனக்கு எதிராககூறப்படும் குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என்பதால், ராஜினாமா தேவையில்லை.
 

 

நான் கவர்னராக பதவியேற்ற பின், உயர் கல்விதுறையில், முறைகேடுகள் மற்றும் பிரச்னை களை தீர்க்க, தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதற்காக, தனிநடைமுறை ஒன்றை தயாரித்துள்ளேன். விரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கும் வகையில், அந்த நடைமுறை அமல்படுத்தப் படும்.

 

துணை வேந்தர்கள் நியமனங்களில், எந்த குறுக்கீடுகளும் இல்லாமல், தகுதியானவர்கள் மட்டும் நியமிக்கப் பட்டுள்ளனர். அண்ணா பல்கலை துணை வேந்தர் நியமனத்திலும், முழுமையான ஆய்வுக்கு பிறகே, நியமனம் நடந்தது. நான், ஐந்து துணைவேந்தர்களை நியமித்துள்ளேன். அதில், இருவர்மட்டுமே, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, நேற்று, மத்திய அமைச்சர், நிதின்கட்கரியுடன் பேசினேன். உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, 'ஸ்கீம்' எனப்படும், செயல்திட்டம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் துவங்கி உள்ளதாக, அவர் தெரிவித்தார். காவிரிபிரச்னை, என் இதயம் போன்றது. அதனால், மிக கவலையுடன், தமிழகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்.

இங்கு பதவியேற்றவுடன், மத்திய அரசுக்கு எழுதியகடிதத்திலும், தமிழகத்தின் முக்கிய நீராதார பிரச்னைகளுக்கு, சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு உள்ளேன். இதில் ஏற்படும் முன்னேற்றங்களை, மாநில அரசுக்கு,அவ்வப்போது தெரிவிக்கிறேன். அரசு திட்டங்கள் குறித்து, மாவட்டந்தோறும் நேரடியாக, ஆய்வு செய்கிறேன். அப்போது, மத்திய திட்டங்கள், மாநிலதிட்டங்கள் என பாராமல், மக்களுக்கான திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்கிறேன்.

என் வேலையை, நான் செய்கிறேன். அரசியல் கட்சியினர், அவர்களுடைய வேலையை செய்கின்றனர்.கவர்னர் மாளிகைக்கு, என்னை சந்திக்கவருவோர், எந்த தடையும் இல்லாமல் வந்து சந்திக்கலாம். முன்னர், பலதடைகள் இருந்தன. அப்படிப்பட்ட அதிகாரிகளை எல்லாம், அனுப்பி விட்டோம். இப்போது, செயலரோ, மற்ற அதிகாரிகளோ, என்னை சந்திப்பதற்கு, எந்தகுறுக்கீடும் செய்யமாட்டார்கள். அப்படி செய்தால், அவர்களும் மாற்றப்படுவர்.இவ்வாறு கவர்னர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...