கன்னியாகுமரியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருப்போம்

கன்னியாகுமரியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருப்போம் என துறைமுக ஆதரவுஇயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ். வேல் பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: கன்னியா குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் தற்போதும் கன்னியா குமரியில் துறைமுகம் அமைய உள்ளது.

 
குளச்சலில் துறைமுகம் கொண்டுவந்தால் மக்கள்தொகை நெருக்கம் காரணமாக குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்படும். எனவே,  மக்கள் குடியிருப்புக்கு சேதம்வராத வகையில் கன்னியா குமரியில் துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்க உள்ளன.


இந்நிலையில், கன்னியாகுமரி பகுதியில் துறைமுகம் வேண்டாம்; குளச்சல் பகுதியில் துறைமுகம் அமைக்கவேண்டுமென்று எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாகசேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகண்டிக்கத்தக்கது.


குமரியில் சரக்குபெட்டக மாற்று முனையம் அமைந்தால், அது இந்தியாவுக்கு வர்த்தகத்தில் பெரியலாபத்தை ஏற்படுத்தி கொடுப்பதோடு, இலங்கை போன்ற நாடுகளுடைய வர்த்தகத்தை கட்டுப்படுத்தி, சீனாபோன்ற நாடுகளின் தலையீட்டையும் தடுக்க முடியும்.


இம்மாவட்டத்தில் உள்ள 6 எம்எல்ஏக்களும் சரக்குபெட்டக மாற்று முனையத் திட்டத்தை எதிர்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்களுக்கு வாழ்வு கொடுக்கும் சரக்கு பெட்டக மாற்று முனையத்திட்டத்தை வேகமாக செயல்படுத்த  உறுதுணையாக இருப்போம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...