திமுக – பாஜக இடையே ஒருபுதிய உறவா?

கடந்த 15 ஆண்டுகளாக திமுக – பாஜக இடையே சுமூகமான உறவுஇல்லை. திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இருந்துவந்தது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்ந்து இருந்துவந்தாலும் 2ஜி வழக்கில் திமுகவை அக்கட்சி கைகழுவிவிட்டது.

இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணா நிதியின் மகள் கனிமொழி ஆகியயோர் பல ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் சிபிஐ நீதிமன்றத்தில் மிகச்சிறப்பாக வாதாடி 2ஜி வழக்கில் இருந்து ராசாவும், கனிமொழியும் விடுதலை ஆகினர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவேண்டும் என திமுக தொண்டர்கள் விரும்பினர்.  ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் அதற்கு முட்டுக்கட்டைபோட்டதால் திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே  தொடர்ந்தது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி கருணாநிதி மறைந்தார். அவரது மறைவுக்கு நேரடியாக சென்னைவந்த பிரதமர் மோடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவின்போது ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி சென்று வாஜ்பாயி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வுகள் பாஜக – திமுக இடையே ஒருஇணக்கமான சூழலை உருவாக்கியுள்ளதாக பொதுவெளியில் பேசப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுவதற்காக சென்னை கொண்டுவரப்பட்டு கமலாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் ஆளாய் கமலாலயம்சென்ற ஸ்டாலின் வாஜ்பாயி அஸ்தி கலசத்துக்கு அஞ்சலிசெலுத்தினார். அவரைத் தொடர்ந்து கனிமொழியும் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே சென்னையில் வரும் 30 ம் தேதி தெற்கிலிருந்து உதித்த சூரியன் கலைஞர் என்ற நினைவேந்தல்  நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இரு நிகழ்வுகளும் திமுக – பாஜக இடையே ஒருபுதிய உறவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...