மேஜிக் ஷோ மூலம் பாஜக மத்திய பிரதேச தேர்தல் பிரசாரம்

ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல மேஜிக்வித்தகரின் 20 மாணவர்களை, மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்த உள்ளது.

ம.பிரதேசத்தில் கடந்த 3 தேர்தல்களில் பாஜக வென்று ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அரியணையில் நீடிக்கவேண்டும் என்ற நோக்கில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது .

இதன் ஒரு பகுதியாக மேஜிக் வித்தை மூலம் ஆட்சியின்போது செய்த திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்ல முனைந்துள்ளது பாஜக. இதுகுறித்து பாஜக-வின் செய்தி தொடர்பாளர் ராஜ்னீஷ் அகர்வால், '15 ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த சாதனைகளை மேஜிக்வித்தை மூலம் எடுத்துச்சொல்ல இருக்கிறோம். 

மேலும் மேஜிக் ஷோ மூலம், 1993 முதல் 2003 வரை திக்விஜய் சிங்கிற்கு கீழ் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளும் சுட்டிக் காட்டப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த சமலாவேணு மேஜிக் குழுவுடன் இணைந்துதான் இந்தத் திட்டத்தை பாஜக செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து வேணு என்.டி.டி.வி-யிடம் கூறுகையில், ‘பாஜக தரப்பு, எதிர்கட்சி குறித்து என்னசொல்ல வேண்டும் என்பது குறித்தும், தங்களைக் குறித்து என்ன தெரிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தெரியபடுத்தியுள்ளது. அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, அதை மக்களுக்கு பிடித்த வகையில் வெளிப்படுத்துவோம்' என்று கூறியுள்ளார். 

பாஜக, இதற்கு முன்னர் உத்தர பிரதேச தேர்தலின் போது, மேஜிக்ஷோக்களை நடத்தின. அப்போது, அது பலநேர்மறை விஷயங்களை கொடுத்ததால், மீண்டும் அந்த யுக்தியை பின்பற்ற உள்ளது பாஜக.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...