மேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவிட்டது

இந்தியா, ஜப்பான் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதிவிரைவு ரயில் (ஹை-ஸ்பீடு) ஒப்பந்தம், கடற்படை கூட்டு ஒப்பந்தம் ஆகியன இதில் அடங்கும். ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது இரு தரப்பு பிராந்திய ஒத்துழைப்பு சர்வதேச அளவில் விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் அரசியல், பொருளாதார சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா, ஜப்பான் இடையிலான 13-வது ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்ட இரு நாட்டு பிரதமர்களும் இரு நாடுகளிடையிலான கூட்டு திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இரு நாடுகளிடையேயான அமைதி, வளமகுறித்தும், சீனாவின் ஆதிக்கம் குறித்தும் விவாதித்தனர்.

இருதரப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவது, இரு நாடுகளிடையிலான தொலைத் தொடர்பு, பிற வழி இணைப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வர்த்தகத்தில் நிலவும் தேக்கநிலை, இரு நாடுகளின் மக்களும் பரஸ்பரம் சுமுகமாக சென்றுவர வாய்ப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களிலும் கூட் டாக செயல்படுவது குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், ராணுவ அமைச்சர்களும் புது டெல்லியில் பேச்சு நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சைபர்ஸ்பேஸ், சுகாதாரம், ராணுவம், கடற் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கூட்டாக செயல்படுவது குறித்து விவாதித்தனர்.

விரைவு ரயில் திட்டம்

மும்பை அகமதாபாத் இடையே மேற்கொள்ளப்படும் அதிவிரைவு ரயில் திட்டத்தில் எட்டப்பட்ட முன்னேற்றம் குறித்தும் இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். இத்திட்டத்துக்கு ஜப்பானின் கடனுதவி குறித்தும் முடிவு செய்யப்பட்டது. இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்படும் மெட்ரோரயில் திட்டத்தில் ஜப்பானின் பங்களிப்பு குறித்தும் ஆராயபட்டது.

இருநாடுகளின் கடற்படையும் இணைந்து செயலாற்றுவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இருநாடுகளும் 7,500 கோடி டாலர் மதிப்பிலான தொகையை அந்தந்த நாட்டு கரன்சிகளில் பரிவர்த்தனை செய்வதுகுறித்து இக்கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஸ்திரமடையும் என்று நம்பப்பபடுகிறது.

முன்னதாக ஜப்பானில் உள்ள தொழிலதிபர்கள் பங்கேற்றகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா தற்போது மிகவேகமாக வளரும் பொருளாதாரமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். மக்கள் நலத்திட்டங்கள், மனித வளத்துக்கு இந்தியா ஆற்றிவரும் பங்களிப்பை சர்வதேச சமூகம் வியந்துபாராட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார். அனைவருக்கு மான நிதிச்சேவை, ஜன்தன் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதிட்டங்களாகும் என்று குறிப்பிட்டார்.

டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி வருவதைக் குறிப்பிட்ட மோடி, 100 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாகவும், 1 ஜிபி டேட்டா சேவைக்கட்டணம் ஒருபாட்டில் குளிர்பானத்தை விட குறைவாக உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

மேக் இன் இந்தியா திட்டமானது இப்போது சர்வதேச பிராண்டாக மாறிவிட்டது. இந்தியாவில் தற்போது தரமான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிற நாடுகளுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் கேந்திரமாக (ஹப்) இந்தியா மாறிவருகிறது. எலெக்ட் ரானிக்ஸ், ஆட்டோமொபைல் துறையில் அபரிமிதமான வளர்ச்சி எட்டப்பட்டு வருகிறது . உலகிலேயே அதிக மொபைல் போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று மோடி கூறினார்.

கடந்த ஆண்டு 100 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனைபுரிந்தது. மிகக்குறைந்த செலவில் சந்திராயன், மங்கள்யான் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. 2022-ல் கங்கன்யான் ஏவப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதிவேகமாக வளரும் பொருளா தார நாடாக விளங்கும் இந்தியாவில் ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினர் முதலீடு செய்யவேண்டும் என்றார். ஜப்பான் உதவியோடு புல்லட் ரயிலும், ஸ்மார்ட் சிட்டியும் இந்தியாவில் சாத்தியமாகிவருகிறது என்றார்.

இந்தியாவின் கபடி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு ஜப்பானில் பிரபலமாகி வருவதைப்போல இந்தியாவில் ஜப்பானின் தற்காப்புக் கலை மிகவும் பிரபலமாகி வருவதாகக் கூறினார்.

இருளைப் போக்கும் ஒளியை போல தீபாவளிப் பண்டிகை யில் ஜப்பானின் முதலீடு இந்தி யாவை பெருமைப்பட வைக்கும் என்று மோடி நம்பிக்கை தெரி வித்தார்.

 

One response to “மேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவிட்டது”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...