முத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, லோக்சபாவில் தாக்கல்

முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் உடனடியாக மூன்றுமுறை தலாக்கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டமசோதா, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

 

இதையடுத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் கொண்டுவந்தது. ஒரு முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், 6 மாதங்கள் வரை மட்டுமே அச்சட்டம் செல்லுபடியாகும். இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கினால், 6 வாரங்களில் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதன்படி, அந்த அவசரசட்டத்துக்கு மாற்றான மசோதாவை, மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

 

முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் உடனடி முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், சிலர் சிறு விஷயங்களுக்குக்கூட முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்கின்றனர். இன்னும் சிலர், வாட்ஸ்-அப் மூலமாகக்கூட விவாகரத்து கூறுகின்றனர். எனவே, இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அவசரசட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தபிறகே இந்தமசோதா கொண்டு வரப்பட்டுள்ளது; சசிதரூரின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றார். உடனடியாக விவாகரத்து கூறும் முத்தலாக் நடைமுறையால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு இந்த மசோதா அவசியம் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...