நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா?

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் அமைய வேண்டுமா? அல்லது குழப்பத்தை கொண்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசு வேண்டுமா? என்று நாட்டு மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில் ஜேட்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணி, தன்னைத் தானே அழித்து கொள்ளும் கூட்டணியாகும். இதில் கருத்து வேறுபாடுகளை கொண்ட கட்சிகள் தான் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அணியில் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. அதுவே அக்கூட்டணியில் பிரச்னையாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

முழுமையான தலைவர் கிடையாது. அவரும் தலைவராக முயற்சித்து விட்டார். அவர் பரிசோதித்து பார்க்கப்பட்டுவிட்டார். ஆனால் தோல்விதான் கிடைத்தது. பிரச்னைகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் ராகுலிடம் இல்லை. குழப்பம் நிலவும் கூட்டணிக்கு தலைமை வகிக்க அவர் விரும்புகிறார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் தெளிவில்லை. அக்கூட்டணி எளிதில் சிதைந்துவிடும். அக்கூட்டணியில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்களை பெற போவதில்லை. அந்தகூட்டணிக்கு என்று நிலையான கொள்கையும் இல்லை. அக்கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும், அதிகபட்ச குறிக்கோள், சுயநலம் கொண்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் சுதந்திரமாக செயல்படும் பல தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைத் தவிர்த்து, பிற அரசியல் கட்சிகள் கடந்தகாலங்களில் பாஜகவுடன் நட்பு பாராட்டியவைதான். அக்கட்சிகளின் சித்தாந்தங்கள், தொகுதிகள் தொடர்பான நிலைப்பாடு ஆகியவை மிகவும் வித்தியாச மானவையாகும்.

அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாருங்கள். தலைவர்கள் பிரச்னையேகிடையாது. கூட்டணியின் தலைவர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. தேசியஜனநாயகக் கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடியே தலைமை வகிக்கிறார். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால், அவரே பிரதமராக மீண்டும் பதவியேற்பார்.

அவரது தலைமையை தேசமே ஏற்றுக் கொண்டு விட்டது. அவருக்கு மக்களிடையே அதிகசெல்வாக்கு உள்ளது. அவரது சாதனைகளே, அவருக்காக பேசும். வரும் மக்களவைத் தேர்தலானது, நம்பிக்கையான தலைவர் மோடி மற்றும் தலைவரை முன்னிறுத்தாத எதிர்க்கட்சி அணிக்கு இடையேயான போட்டியாக இருக்கும். எதிர்க் கட்சி கூட்டணியில் ஏராளமான தலைவர்கள் இருக்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும், பிறரை சதியால் வெளியேற்ற முயற்சிப்பார்கள். தற்காலிக அரசை தருவது குறித்து மட்டுமே அவர்களால் வாக்குறுதி அளிக்கமுடியும். இதனால் குழப்பம்தான் ஏற்படும். எனவே, மக்களவை தேர்தலானது நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா? என்பதை தீர்மானிப்பதாக இருக்கும் என்று அந்தப் பதிவுகளில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...