மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்

தூத்துக்குடி தொகுதி பா.ஜ.க  வேட்பாளராக கட்சியின் மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் அவர் இன்று தூத்துக்குடி வந்தார். அவருக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தபகுதி முன்னேற்றம் அடையவேண்டும். இங்கு கிடைக்கும் பொருட்களைகொண்டு பொருளாதாரத்தை உயர்த்துவது எப்படி என்பது குறித்து வி‌ஷன் டாக்குமென்ட் தயார்செய்துள்ளேன்.

இது போன்று யாரும் சிந்தித்திருக்க முடியாது என்ற அளவில் அந்த டாக்குமென்ட் இருக்கும். இதைவருகிற 26-ந்தேதி தூத்துக்குடி வரும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் வெளியிடுவார். பிரதமர் மோடியை ஸ்டாலின் சுயநலவாதி என்கிறார். குடும்பத்திற்கு, வாரிசுக்கு என எதையும் செய்யாதவர் மோடி. ஆனால் வாரிசுக்காக பலசலுகைகளை அளிப்பவர் ஸ்டாலின். ராகுல் காந்தியை பிரதமராக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதை அவரது கூட்டணி கட்சிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகிற 25-ந்தேதி எனது வேட்புமனுவை தாக்கல்செய்ய உள்ளேன். அதைத்தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன். விளாத்திகுளம் வேட்பாளர் சின்னப்பன் பிரசாரத்தின் போது வாய்தவறி கனிமொழி பெயரை உச்சரித்தார். இதை நான் பெரிதாக எடுக்கவில்லை.

மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். தூத்துக்குடி தொகுதியில் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

ஸ்டெர்லைட் பிரச்சனை வழக்கில் உள்ளது. நான் நேர்மாறான அரசியல் செய்யவே விரும்புகிறேன். எதிர்மறையான அரசியல்செய்ய மாட்டேன். மக்கள் எளிதில் அணுககூடிய சாதாரண பெண்ணாகவே இருப்பேன்.

கருத்து சுதந்திரம் குறித்து கனிமொழி பேசுவது சரியல்ல. பா.ஜனதா ஆட்சியில் கருத்துசுதந்திரம் இருப்பதால்தான் பலர் பேச முடிகிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரசுடன் கைகோர்த்து கொண்டு இதுபற்றி பேசக்கூடாது. சாதிக்பாட்சா மனைவி கூடா நட்பு கேடாய் விளையும் என கலைஞர் கூறிய வார்த்தையை வைத்து விளம்பரம் செய்ததற்காக அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. அவருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

மத்தியில் பா.ஜனதாவும், மாநிலத்தில் அதிமுக.வும் ஆட்சிபுரிவதால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்கமுடிகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரை இது பாசிசகட்சி அல்ல. பாசமுள்ள பா.ஜ.க.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் தான் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்தானது போடப்பட்டு செயல்படுத்தப்பட்டது தற்பொழுது கையெழுத்துப் போட்ட திராவிட முன்னேற்ற கழகம் அதனை தடுப்போம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும், தேர்தலுக்காக முக ஸ்டாலின் அவர்கள் வேடமிடுகிறார் என்றும், கையெழுத்து இட்ட திராவிடர் கழகமே அதனை தடுப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்வோம் என்று கூறுவதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பாஜக தமிழகத்திற்கு செய்தது என்ன என்று ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பாஜக தமிழகத்திற்கு செய்ததை பட்டியலிட்டு கூற முடியும் என்றும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்று உள்ளது கன்னியாகுமரியில் சாலை வசதிகளை மேம்படுத்தும் விதமாக பாலங்கள் திறக்கப்பட்டுள்ளது மேலும் மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான அடிக்கல் நாட்டு விழா என்பது நடைபெற்றுள்ளது என்று பட்டியலிட்டு சிலவற்றை குறிப்பிட்டார்..

 

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை ...

இந்தியாவின் முதல் விமான உற்பத் ...

இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக உ ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக  உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம் பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...