5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது

5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பொருளாதாரத்தை அதிகரிக்கபொருளாதார ஆய்வறிக்கை வழிகாட்டியுள்ளது என்று பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. நேற்று  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்த பொருளாதாரவளர்ச்சி, 2020ம் நிதியாண்டில் 7 சதவீதமாக உயரக் கூடும் என்று அதில் தெரிவிக்கப் பட்டது. “பொருளாதாரம் தொடர்ந்து நிலைத் திருப்பதால் 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகமாற, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாகத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. “நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை பொருளாதாரத்தின் தடைசக்திகளை உடைத்து தள்ளவேண்டும், அதேநேரத்தில் அதிகதிறன் பயன்பாடு மற்றும் வணிக எதிர்பார்ப்புகளின் உயர்வு ஆகியவை 2019-20ம் ஆண்டில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்க பட்டுள்ளது.

இந்தபொருளாதார ஆய்வறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், பொருளாதார ஆய்வறிக்கை, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான ஒருபார்வையை கோடிட்டுக் காட்டுகிறது. இது சமூகத்துறையின் முன்னேற்றம், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் எரிசக்தி பாதுகாப்பிலிருந்து பெறப்பட்ட லாபங்களை சித்தரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.