காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு, இந்தியாவின் பெரிய முஸ்லிம் அமைப்பான, ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு ஆதரவுதெரிவித்துள்ளது. காஷ்மீர், இந்தியாவின் ஒரு அங்கம் என தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி. பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிக்க முடியாது. இந்தஇயக்கங்கள் இந்தியாவிற்கு மட்டும் அல்ல. காஷ்மீர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணையும் போதுதான் அவர்களின் வாழ்க்கை மேம்படும். பாகிஸ்தான், காஷ்மீர் மக்களை கேடயமாக பயன் படுத்தி, காஷ்மீரை போர்க்களமாக மாற்றியது கண்டனத்திற் குரியது.

பாகிஸ்தானின் நடவடிக்கைகள், காஷ்மீர்மக்களை இடர்பாடுகளில் இருந்து மீட்பதற்கும் சிக்கலாக உள்ளது. அனைத்து ஆக்கப்பூ ர்வமான நடவடிக்கைகள் எடுத்து, காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையும் அமைதியும் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறபட்டுள்ளது.

தீர்மானம் குறித்து, அந்த அமைப்பை சேர்ந்த மெகமூத் மதானி கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப் படுவதாக ஒரு தோற்றத்தை, சர்வதேச அளவில் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இந்த நடவடிக்கைக்கு, நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளில், ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் அமைப்பு பெரியது. இதன்தலைவர் மவுலானா சையத் அர்ஷத் மதானி கடந்த வாரம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தார். அப்போது, ஹிந்து – முஸ்லிம் மக்கள் இடையே ஒற்றுமையை பலப் படுத்துவது, கும்பலால் அடித்து கொல்லப்படும் சம்பவங்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...