சுத்தமான குடிநீர் பா.ஜ.,தேர்தல் அறிக்கை

தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியை வீழ்த்துவதற்கான வியூகம் வகுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செயல் படுகின்றன.

இதற்கிடையே, பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிரபிரசாரமும் நடைபெற்று வருகிறது, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, ஹர்ஷ் வர்தன், டெல்லி பாஜக தலைவர் ,மனோஜ் திவாரி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

அனைத்து வீடுகளுக்கும் தூயகுடிநீர் வழங்குவது, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, 9,10ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவசசைக்கிள், பிறக்கும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வழங்கப்படும் மற்றும் விதவை பெண்களின் மகளின் திருமணத்திற்கு ரூ.51 ஆயிரம் வழங்கப் படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...