மாநிலங்களவை தேர்தல் ; 12-13 இடங்களை பிடிக்கும் பாஜக

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிகாலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
 காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்ததேர்தலில் போட்டியிட வரும் 6 ஆம் தேதியில் இருந்து வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.  13 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  மக்களவையில் 303 உறுப்பினர்களை கொண்டு தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ள போதிலும், மாநிலங்களவையில் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. இதனால், முக்கியமசோதாக்கள்  நிறைவேற கூட்டணி கட்சிகளை நம்பி அந்தக் கட்சி உள்ளது.
இந்த நிலையில், வரும் 26 ம் தேதி நடைபெற உள்ள  மாநிலங்களவை தேர்தலில் தங்கள்கட்சிக்கு 12-13 இடங்கள் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.  இதன் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94-95 ஆக உயரும்.  வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அடுத்தசுற்று தேர்தலில், பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் உத்தர பிரதேசத்தில்  அக்கட்சிக்கு அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.  இருந்தபோதிலும், பாஜகவால் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினமான ஒன்றாக பார்க்க தோன்றுகிறது.
வரும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் பிறபிராந்திய கட்சிகளை பொருத்தவரை திமுக, அதிமுக தலா 3 இடங்களை கைப்பற்ற உள்ளது. ஜேடியூ, பிஜேடி மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களையும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 4 மற்றும் டி.ஆர்.எஸ் 1 இடத்தையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...