மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்தபதிலில் கூறியிருப்பதாவது:
ஒருகோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில், பெண்களுக்கென தனியாக பிங்க்பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என அனைவரும் பெண்களாகவே இருப்பர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இதன்படி, சில நகரங்களில் ஏற்கெனவே இந்தவகை பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை வெற்றிகரமாக செயல்படுகின்றன.
டெல்லியில் அனைத்து புதியபஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும். மேலும் 2 மற்றும் 3 சக்கர மின்சார வாகனங்களுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட பட்டுள்ளது. இந்தவகை வாகனங்கள் பெண்களின் போக்குவரத்துக்காக பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |