கரோனா குவியும் நிதி

கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள பொது மக்கள் தாராளமாக நிதி உதவிவழங்க பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, அரசுதுறைகள், நிறுவனங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனா்.

இந்தநிலையில், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரணநிதிக்கு ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.

அதன்படி பிரதமரின் நிதிக்கு, பொதுத்துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி ரூ.300 கோடியும், ஐஓசி ரூ.225 கோடியும், பாரத்பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.175 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.120 கோடியும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.

மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில்இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவியை அறிவித்துள்ளன.

இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியுள்ளதாவது:

‘பிரதமா் நிதிக்கு பொதுத்துறை மற்றும் கூட்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1031.29 கோடி பங்களிப்பை வழங்கியதற்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதலாக, பொதுத்துறை நிறுவன பணியாளா்கள் அவா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.61 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனா் என்று தா்மேந்திர பிரதான் அந்தப்பதிவில் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே பொது துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் ரூ.150 கோடியும், செயில் ரூ.30 கோடியும், பாரத ஸ்டேட்வங்கி பணியாளா்கள் ரூ.100 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.

மேற்கண்டவை தவிர, எல்ஐசி நிறுவனம் ரூ.105 கோடியும், கோல்இந்தியா ரூ.220 கோடியும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை (ஐடிபிபி) பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.10.53 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளன. மேலும், வருமானவரி துறையும் தங்களது பணியாளா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ. 25 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பொது மக்களும் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது. .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை ...

இந்தியாவின் முதல் விமான உற்பத் ...

இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக உ ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக  உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம் பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...