டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொருளாதாரம் தொடர்பாகவும் ஆலோசிக்க பட்டதாகத் தகவல் கூறுகின்றன.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “கரோனா சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் குற்றவியல் தண்டனை சட்டத்தில் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத் தண்டனையுடன் ரூபாய் 1 லட்சம் முதல் 5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனைகள், வாகனங்களைச் சேதப்படுத்தினால் இருமடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படும். மருத்துவர்களைக் காக்கும்வகையில் அவசரச்சட்டம் கொண்டு வரவும், தொற்று நோய்கள் சட்டம் 1897-ல் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் அவசரச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது” என்றார்.
இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூபாய் 15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதில் அவசரக்கால நிதியாக ரூபாய் 7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |