உயரும் மோடியின் செல்வாக்கு

கரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு உயர்ந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனம், ‘மார்னிங் கன்சல்ட்’. இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஜப்பான், பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கரோனாவைரஸை எவ்வாறு கையாளுகின்றனர், அவர்களுக்கு மக்கள்மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து இந்நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கைவெளியிட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி83% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தை பிடித்தார். மெக்சிகோ அதிபர்லோபஸ் ஒபரடோர் 65% ஆதரவுடன் 2-வது இடத்தையும், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 60 % ஆதரவுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனுக்கு 9-வது இடமும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு 10-வது இடமும் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து அண்மையில் நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

கரோனா வைரஸ் பரவலைதடுக்க முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு 76.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தபோது பிரதமர் மோடியின் மக்கள் ஆதரவு 93.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோராகுவின் நல்லபலன் அளிக்கிறது என்று மருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துக்கு உலகம் முழுவதும் கடும்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்ஸி குளோராகுவின் மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்துவருகிறது.

சர்வதேச அமைதி என்ற அமைப்பின் தெற்காசிய திட்டஇயக்குநர் மிலன் வைஷ்ணவ் கூறும்போது, “இக்கட்டான நேரத்தில் பிரதமர்மோடி திறம்பட செயல்பட்டு தனது செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளார்” என்றார்.

உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் கரோனா வைரஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளன. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுவின் மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவிலும் பிரதமர்
மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...