சீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறியுள்ளார் .
கல்வான் மோதலைதொடர்ந்து சீனாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு காரணங் களுக்காக 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சீனாவின் Weibo சமூக வலைதளத்தில் பிரதமர்மோடியின் கணக்கில் உள்ள புகைப்படங்கள், பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அவரது முதல் சீன பயணத்தையடுத்து 2015ம் ஆண்டு இந்தகணக்கு தொடங்கப்பட்டது. அதில் சுமார் 2,44,000 பேர் பிரதமர் மோடியின் கணக்கை பின்தொடர்ந்து வந்தனர். அதில்பெரும்பாலான மக்கள் சீன நாட்டை சேர்ந்தவர்கள்.
குறிப்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்தியவருகைக்கு பிறகு இருநாட்டின் உறவு குறித்த செய்திகளை பிரதமர் மோடி தனது Weibo கணக்கில் வெளியிட்டிருந்தார்.
பிரதமர் மோடி Weibo கணக்கில் இது வரை 115 பதிவுகள் போட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் விஐபிக்களின் சமூக வலைதள கணக்குகளில் இது போன்ற மாற்றங்கள் மேற்கொள்ள நிறைய விதிமுறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. Weiboல் இருந்து வெளியேற பிரதமருக்கு அனுமதி வழங்குவதில் சீனா தாமதம் செய்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |