புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்ப தாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவ தாகவும் இருக்கும்

”புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்ப தாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவ தாகவும் இருக்கும்,” என்று, பிரதமர் மோடி கூறினார்.உயர் கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்தது, 50 சதவீதம் அதிகரிக்கும். வேலை தேடுவோரை உருவாக்காமல், வேலை அளிப்பவர்களைஉருவாக்கும் என்றும், மோடி உறுதி அளித்தார். நாட்டில், 34 ஆண்டுகளுக்கு பின், தேசிய கல்விக் கொள்கையில், மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, தேசிய கல்விக்கொள்கை குறித்து, ‘டிவி’ சேனல்கள் வழியாக, நாட்டு மக்களிடம், பிரதமர் மோடி, நேற்று மாலை பேசினார். அவர் கூறியதாவது:நாட்டில், மாணவர்களுக்கான கல்வியை தரமாக வழங்குவதில், அதிககவனம் செலுத்தி வருகிறோம். நம் கல்வி முறையை, மிகவும் முன்னேற்றமாகவும், நவீன மாகவும் மாற்றுவதே, எங்கள் நோக்கம். இந்த, 21ம் நுாற்றாண்டு, அறிவின் சகாப் தமாக உள்ளது. கற்றல், ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்து வதற்கான நேரம் இது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, ‘தேசிய கல்விக் கொள்கை – 2020’ நம் நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பங்கள், எண்ணங்களை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை, மாணவர்களின் நலனுக்கு ஏற்ப, கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐந்து ஆண்டுகளாக, அனைத்து துறையை சேர்ந்தவர்களுடனும் கலந்துரையாடிய பின், இது தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை கல்விசுமையிலிருந்து மட்டுமின்றி, பொதிமூட்டை போல், புத்தகபையை சுமந்து செல்வதிலிருந்தும் விடுவிக்கும். தற்போதைய கல்வி முறையில் உள்ளதுபோல், வெறும் மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை. பாடத்தின் அறிவுமட்டும், மனிதனை உருவாக்கி விடாது. நம் மாணவர்கள் எதைப் படித்தனரோ, அது, வேலைக்கு உதவவில்லை. புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் வாழ்கைக்கு உதவும்வகையில் உருவாக்க பட்டுள்ளது.

இது, மாணவர்களை, விமர்சன சிந்தனைக்கு மாற்றும்.தேசிய கல்வி கொள்கையில், மாணவர்களுக்கேற்ற மாற்றங்களுக்கு பெரியளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வழி, சிறியபாதையாக இல்லாமல், பல நுழைவு வாயில்களை கொண்டதாக இருக்கும். ஆரம்பகல்வியில் இருந்தே மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும், 2035வது ஆண்டில், உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கையை, 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பதும், நம் நோக்கம். நாட்டில் மொழிப்பாடம் என்பது உணர்வு பூர்வமானது. அதனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்தியாவின் மொழிகள், மேலும் மேம்படும். இது, இந்திய மாணவர்களின் அறிவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, நம்நாட்டின் ஒற்றுமையையும் அதிகரிக்கும். தாய்மொழியில் படிப்பதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்களால் உருவாக்கமுடியும். வளர்ந்த நாடுகள், தாய் மொழியில் கற்றுத்தான் முன்னேற்றம் கண்டுள்ளன. வேலைதேடுவோரை உருவாக்காமல், வேலையை உருவாக்குவோரை, புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்.பாடத்திட்டத்தில், பல்வேறு தொகுதிகளிலிருந்து, பாடங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

புதியகல்வி கொள்கையை அமல்படுத்திய பின், அறிவியல், வர்த்தகம், மனிதநேயம் அல்லது தொழில் போன்ற எந்தவொரு தொகுதியிலிருந்தும், தங்களுக்கு ஏற்ற பாடங்களை, மாணவர்கள் தேர்வுசெய்ய முடியும். இந்த கல்விக்கொள்கை, மக்கள் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டது.கற்றல், கேள்வி கேட்பது, தீர்வு ஆகிய மூன்று விஷயங்களையும், மாணவர்கள் ஒருபோதும் நிறுத்தக் கூடாது. கற்கும் போது, மாணவர்கள் அறிவை பெறுகின்றனர்.

கேள்விகேட்கும் போது, ஒரு செயலைத்தாண்டி, சிந்தனை செய்து, அதற்கான வழியையும் கண்டுபிடிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை வாயிலாக, கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது, தனி மனித திட்டம் அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம். அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைப்பதை, புதிய கல்விக்கொள்கை உறுதி செய்துள்ளது. இவ்வாறு, பிரதமர் மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...