வசந்தகுமார் மறைவு தலைவர்கள் இரங்கல்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, காங்கிரஸ் எம்.பி.,யும், தொழிலதிபருமான வசந்தகுமார், 70, நேற்று (ஆக.,28) காலமானார். அவரது உடலுக்கு,  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மக்களவைத்தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமார் நேற்று காலமானார். நிமோனியா பாதிப்பு காரணமாக வசந்த குமாரும் அவரது மனைவி தமிழ்ச் செல்வியும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 11ம் தேதி அனுமதிக்கப்பட்டனா். இதில் தமிழ்ச்செல்வி உடல்நலம் தேறினார். வசந்த குமார் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தநிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்றுமாலை காலமானார்.

வசந்த குமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு, வசந்த் அண்ட்கோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும், ஏராளமான பொது மக்களும், அப்பகுதி வணிகர்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

தலைவா்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்து வதற்காக காமராஜர் அரங்கில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கிருந்து அவரின் உடல் சொந்தஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

 

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள்  இரங்கல் செய்தியில் கூறியதாவது.

தான்கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் முக்கிய ஒருவராக உயர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உழைத்த திரு. வசந்தகுமார் அவர்களின் மரணம் காங்கிரஸ்க்கு ஒரு மாபெரும் இழப்பாகும்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பணிபுரிந்த நிலையில் அவருடைய மரணம் பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

காமராஜரின் தொண்டராக, தொழிலதிபராக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட திரு. ஹெச். வசந்த குமார் அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

 

 

One response to “வசந்தகுமார் மறைவு தலைவர்கள் இரங்கல்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...